மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். அதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் இரவு 11 மணி முதல் இன்று காலை வரை விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.மதுரை சித்திரை திருவிழாவின்…
Category: Aanmegam
பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
மதுரை, ஏப்.23- சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். ஆற்றுப் பகுதியில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா, மாயவதாரா, அழகர்மலையானே’ என உணர்ச்சிப் பெருக்கில் விண்ணதிர கோஷங்கள் எழுப்பினர்.அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா முதல்…
அழகர்கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்: அழகர்மலையிலிருந்து மதுரைக்கு இன்று கள்ளழகர் புறப்படுகிறார்: மூன்றுமாவடியில் நாளை எதிர்சேவை
மதுரை, ஏப் 21- மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கிய நிலையில் இன்று (ஏப். 21) மாலை அழகர்மலையிலிருந்து மதுரைக்கு கள்ளழகர் புறப்படுகிறார். மதுரைக்கு வரும் கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி மூன்றுமாவடியில் நாளை நடைபெறுகிறது.கள்ளழகர் கோவில் சித்திரைத்…
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
மதுரை, ஏப் 21- மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா…
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின் கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
தஞ்சாவூர், ஏப் 21- தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேரின் அலங்கார பந்தல்கள் மின்கம்பிகளில் அடுத்தடுத்து சிக்கியது. அதனை தொடர்ந்து மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த…
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
மதுரை, ஏப் 20- சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நாளை கோலாகலமாக நடைபெறுகிறது.தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். வருடத்தின்…
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
மதுரை, ஏப் 19- சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி,…
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விழாவில் கைம்பெண் செங்கோல் வாங்கக்கூடாது என்பதா? மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை கண்டனம்
மதுரை, ஏப்.17- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விழாவில் கணவரை இழந்தவர் செங்கோல் வாங்க தடை கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ஐகோர்ட் கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.உலக புகழ்ப்பெற்ற மிகவும் பிரசித்திப்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெறவுள்ளது. சித்திரை திருவிழாவின் முத்திரை…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கோலாகலமாக நடந்த தேரோட்டம்: வடம்பிடித்து இழுத்த பக்தர்கள் பரவசம்
திருச்சி, ஏப் 17- சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று தேரோட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷமிட்டவாறு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்…
அயோத்தியில் ராம நவமி விழா: ராமர் நெற்றியில் சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு
அயோத்தி, ஏப் 17- அயோத்தியில் நடந்து வரும் ராமநவமி விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று கோவில் கருவறையில் வீற்றிருக்கும் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது.உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி பாலராமர்…