Skip to content
NallaNaal

    • Enter a date to search

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

விடுமுறை நாள்: திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தூத்துக்குடி, ஜூலை 01- நேற்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகாரத் தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கூட்டம் அலைமோதியதால் ரூ. 100 கட்டணம் மற்றும் இலவச தரிசனம் வரிசையில் பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்த வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
வழக்கம் போல் நேற்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. தற்போது கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் அமருவதற்கு போதிய இட வசதிகள் இல்லாததால் பக்தர்கள் தரிசன வரிசை பகுதி மற்றும் நடைபாதைகளில் அமர்ந்திருந்து ஓய்வு எடுத்தனர்.

வார ராசி பலன்கள் 30.06.2024 முதல் 06.07.2024 வரை2024-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates - 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

    • Enter a date to search

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 18.05.2025 முதல் 24.05.2025 வரை
  • வார ராசி பலன்கள் 11.05.2025 முதல் 17.05.2025 வரை
  • வார ராசி பலன்கள் 04.05.2025 முதல் 10.05.2025 வரை
  • ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்: நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தது
  • வார ராசி பலன்கள் 27.04.2025 முதல் 03.05.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com