மதுரை, மே. 05- மதுரை சித்திரை பெருந்திருவிழாவையொட்டி மதுரை வந்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நேற்று விடிய விடிய நடந்தது. அதை தொடர்ந்து மதுரை வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில்…
Category: Aanmegam
ஹரஹர சங்கர, ஜெய ஜெய சங்கர கோஷத்துடன் மதுரை மாசி வீதிகளில் உலா வந்த மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தேரோட்டம் – வடம்பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
மதுரை, மே. 04- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹரஹர சங்கர, ஜெய ஜெய சங்கர கோஷங்களை எழுப்பி தேரை வடம்பிடித்து இழுத்தனர். 4 மாசி வீதிகளிலும்…
மதுரையில் வேதமந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக நடந்தமீனாட்சி திருக்கல்யாணம் : * தாலி மாற்றிக் கொண்ட பெண்கள் : * மாசி வீதிகளில் இன்று தேரோட்டம்
மதுரை, மே. 03- மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கல்யாணம் வேதமந்திரங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க நேற்று நடந்து. அதை தொடர்ந்து பெண் பக்தர்கள் தாலி மாற்றிக் கொண்டனர். இன்று மாசி வீசிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.உலக பிரசித்தி பெற்ற மதுரை…
திருவண்ணாமலையில் நாளை பவுர்ணமி கிரிவலம் துவக்கம்
திருவண்ணாமலை, மே. 03- திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் நாளை தொடங்குகிறது.திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான…
அழகர்கோவிலில் இருந்து தங்கப்பல்லக்கில் மதுரைக்கு இன்று கள்ளழகர் புறப்பாடு : நாளை மூன்றுமாவடியில் எதிர்சேவை
மதுரை, மே. 03- சித்திரை திருவிழாவையொட்டி அழகர்கோவிலில் இருந்து தங்கப் பல்லக்கில் மதுரைக்கு இன்று கள்ளழகர் புறப்படுகிறார். நாளை மூன்றுமாவடியில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் பிரசித்தி பெற்றது சித்திரை…
திருப்பதி கோவிலில் அலைமோதும் கூட்டம்: தரிசனத்திற்காக பக்தர்கள் 30 மணிநேரம் காத்திருப்பு
திருப்பதி, மே 02- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை அடுத்து தரிசனத்திற்காக 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். தரிசனம்…
தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
தஞ்சை, மே. 02- தஞ்சை பெரியகோவிலில் நேற்று சித்திரை பெருவிழா தேரோட்டம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தியாகேசா, ஆரூரா என்ற பக்தி கோஷங்களுடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரைத் பெருவிழா ஆண்டுதோறும் 18 நாள்கள்…
சித்திரை திருவிழாவில் இன்று திக்விஜயம்: மதுரை அரசாளும் மீனாட்சிக்குநாளை திருக்கல்யாண வைபவம்
மதுரை, மே. 01- சித்திரை திருவி்ழாவின் முக்கிய நாளான இன்று திக் விஜயம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நாளை மதுரை அரசாளும் மீனாட்சிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு…
யானைகள் அணிவகுப்பு, மேளதாளங்கள் முழங்க திருச்சூரில் கோலாகலமாகநடந்த பூரம் திருவிழா
திருவனந்தபுரம், மே. 01- யானைகளின் அணிவகுப்பு, மேள தாளங்களுடன் திருச்சூரில் பூரம் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலத்தில் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்று திருச்சூர் பூரம் திருவிழா. இந்த விழாவில் நடைபெறும் யானைகளின் அணிவகுப்பு, வாண வேடிக்கை போன்றவை உலக பிரசித்தி பெற்றது.இந்த…
அழகர்கோவிலில் இருந்து வரும் 3-ம் தேதி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்படுகிறார் கள்ளழகர் : மூன்று மாவடியில் 4-ம் தேதி எதிர்சேவை
மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி அழகர்கோவிலில் இருந்து வரும் 3-ம் தேதி தங்கப்பல்லக்கில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்படுகிறார். வரும் 4-ம் தேதி மூன்றுமாவடியில் கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. மதுரை வரும் கள்ளழகர் வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில்…