Skip to content
NallaNaal

    • Enter a date to search

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • 2023 – விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

திருப்பதி கோவிலில் அலைமோதும் கூட்டம்: தரிசனத்திற்காக பக்தர்கள் 30 மணிநேரம் காத்திருப்பு

திருப்பதி, மே 02- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை அடுத்து தரிசனத்திற்காக 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் அனைத்து அறைகளும் நிரம்பியது. அதற்கு பிறகு சுமார் 1 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருந்தனர்.
தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்க ளுக்கு குடிநீர், மோர், பால், உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. சிறிய குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. திருப்பதி ரெயில் நிலையம் அருகே உள்ள வைகுண்டம் காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள சீனிவாசம், அலிபிரி ஆகிய இடங்களில் 25 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
இலவச தரிசன டோக்கன் இல்லாத பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரத்துக்கும் மேலாகிறது. ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 82 ஆயிரத்து 582 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 43,526 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்அழகர்கோவிலில் இருந்து தங்கப்பல்லக்கில் மதுரைக்கு இன்று கள்ளழகர் புறப்பாடு : நாளை மூன்றுமாவடியில் எதிர்சேவை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

    • Enter a date to search

2023-ம் ஆண்டிற்கான விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2023 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2023 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2023-ம் ஆண்டு சந்திராஷ்டம நாட்கள்
  • 2023 இந்துக்கள் பண்டிகை
  • 2023 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2023 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • இராகு, எமகண்டம், குளிகை முதலியன
  • மனையடி சாஸ்திரம்
  • கெளரி பஞ்சாங்கம் – 2023

முக்கிய செய்தி

  • புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: தமிழகத்தில் பெருமாள் கோவில்களில் நீண்டவரிசையில் பக்தர்கள் தரிசனம்
  • வார ராசிபலன் 24.09.2023 முதல் 30.09.2023 வரை
  • திருப்பதி பிரம்மோற்சவ 6-வது நாள்: அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி
  • திருப்பதியில் இன்று கருட சேவை: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
  • திருப்பதியில் பிரமோற்சவ விழா: சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா
©2023 NallaNaal | Nallanaal.com