தூத்துக்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 13-ம் தேதி தொடங்குகிறது. கந்த சஷ்டி விழாவுக்கான சிறப்பு பணி அலுவலர்களை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்ற போதிலும் கந்த சஷ்டி விழா அனைத்துக்கும் சிகரமாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் கந்தசஷ்டி கடைபிடிக்கப்படும் ஆறு நாட்களும் பக்தர்கள் பல்வேறுவிதமான விரதங்களை மேற்கொள்வார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வரும் 13-ம் தேதி தொடங்குகிறது. 18-ம் தேதி சூரசம்ஹாரம், 19-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவுக்கான சிறப்பு பணி அலுவலர்களை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கந்த சஷ்டி விழாவின் உச்ச நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு லட்சக்கணக்கான மக்கள் கூடுவர்.
எனவே வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இந்த சூரசம்ஹார நாளில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்.