Skip to content
NallaNaal

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

சபரிமலை மண்டல பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்

திருவனந்தபுரம், நவ. 20- சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற டிசம்பர் 27-ம் தேதி நடைபெறும் மண்டல பூஜை தின தரிசனத்திற்கான முன்பதிவு இன்று (20-ம் தேதி) தொடங்குகிறது என தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டது. முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 13 மையங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அனைத்து மையங்களிலும் முன்பதிவுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
3-வது நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் 45 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். இந்த நிலையில் வருகிற டிசம்பர் 27-ம் தேதி நடைபெறும் மண்டல பூஜை தின தரிசனத்திற்கான முன்பதிவு இன்று (20-ம் தேதி) தொடங்குகிறது என தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். வயதானவர்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு சிறப்பு தரிசன வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகப் பெருமான் : பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளந்ததுகூட்ட நெரிசல்: பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 29.06.2025 முதல் 05.07.2025 வரை
  • வார ராசி பலன்கள் 22.06.2025 முதல் 28.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 15.06.2025 முதல் 21.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com