Skip to content
NallaNaal

    • Enter a date to search

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • 2023 – விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை, ஜூலை. 17- ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெறும். இதுதவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் நடை திறக்கப்படும்.
அதன்படி ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்தினார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டது.
பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ் ரகலசாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறுகிறது.
வரும் 21-ம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜையையொட்டி பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், கோட்டயம், செங்கன்னூர், பத்தனம் திட்டை, கொட்டாரக்கரை, எர்ணாகுளம் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ம் தேதி மாலையில் திறக்கப்படுகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி நிறை புத்தரிசி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

திருப்பதி கோவிலில் ஆனிவார ஆஸ்தானம் இன்று நடக்கிறதுஅமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சாமி தரிசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

    • Enter a date to search

2023-ம் ஆண்டிற்கான விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2023 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2023 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2023-ம் ஆண்டு சந்திராஷ்டம நாட்கள்
  • 2023 இந்துக்கள் பண்டிகை
  • 2023 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2023 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • இராகு, எமகண்டம், குளிகை முதலியன
  • மனையடி சாஸ்திரம்
  • கெளரி பஞ்சாங்கம் – 2023

முக்கிய செய்தி

  • புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: தமிழகத்தில் பெருமாள் கோவில்களில் நீண்டவரிசையில் பக்தர்கள் தரிசனம்
  • வார ராசிபலன் 24.09.2023 முதல் 30.09.2023 வரை
  • திருப்பதி பிரம்மோற்சவ 6-வது நாள்: அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி
  • திருப்பதியில் இன்று கருட சேவை: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
  • திருப்பதியில் பிரமோற்சவ விழா: சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா
©2023 NallaNaal | Nallanaal.com