சிதம்பரம், அக். 16- சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு 30 அடி உயரத்தில் பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி தினத்தின் தொடக்க தினமான நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் கல்யாண மண்டபத்தில் 30 அடி உயரத்தில், 30 அடி அகலத்தில் 21 படிகளுடன் பிரம்மாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலு வருகிற 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.
9 தினங்களும் இரவு 9 மணிக்கு கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன்பு உள்ள வெள்ளி ஊஞ்சலில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு, ஊஞ்சல் உற்சவமும், தீபாராதனையும் நடைபெறுகிறது. கொலுவில் நடராஜர் முதல் சிறிய பொம்மைகள் வரை சுமார் 3500 ஆயிரம் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மாண்டமான கொலுவினை திரளான மக்கள் வந்து பார்த்து வணங்கி செல்கின்றனர்.
நவராத்திரி கொலு குறித்து கோவில் பொதுதீட்சிதர்களில் ஒருவர் கூறுகையில்,
ஒரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை பரினாம வளர்ச்சிகளை வணங்கும் வன்னம் இந்த கொலு வைத்து வணங்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.