திருப்பரங்குன்றம், ஏப். 30- வரும் 2-ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுவதையொட்டி மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுக்க பவளக்கனிவாய் பெருமாள் நாளை 1-ம் திருப்பரங்குன்றத்தில் குன்றத்தில் இருந்து புறப்படுகிறார்.
மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கடந்த 23-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக வரும் 2-ம் தேதி காலை 8.35 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரே வரருக்கு திருக்கல்யாண வைபோகம் நடக்கிறது.
மீனாட்சி அம்மனை சுந்த சுவரருக்கு திருப்பரங்குன்ற பவளக்கனிவாய் பெருமாள் தாரை வார்த்து கொடுப்ப தாக வரலாறாக இருந்து வருகிறது. இதையொட்டி மீனாட்சி அம்மன் அருளாட்சி புரிய மதுரைக்கு திருப்பரங் குன்றம் முருகன் கோவிலில் இருந்து நாளை 1-ம் தேதி மாலை 5 மணிக்கு மேள தாளங்கள் முழங்க பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு வருகிறார்.
இதேவேளையில் முருகப் பெருமான், தெய்வானையு டன் புறப்பட்டு மீனாட்சி பட்டணத்திற்கு வருகிறார். திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை வரை வழிநெடுகிலுமாக ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து முருகப் பெருமான் தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாளை வழிபடுகின்றனர்.
அதை தொடர்ந்து 2-ம் தேதி மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் பவளக்கனிவாய் பெருமாள் பங்கேற்று மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுக்கிறார். இதே வேளையில் தெய்வானையுடன் இதே முருகப்பெருமான் திருக் கல்யாணத்தில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலிக் கிறார். 5-ம் தேதி வரை மதுரையிலே தெய்வானையுடன் முருகப்பெருமான், பவளக்கனிவாய் பெருமாள் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
5-ம் தேதி மாலை 5 மணியளவில் நகை வீதியில் இருந்து பல்லக்கில் பவளக் கனிவாய் பெருமாளும், பூப்பல்லக்கில் தெய்வானை யுடன் முருகப்பெருமானும் புறப்பட்டு தன் இருப்பிடமான திருப்பரங்குன்றம் வருகின்றனர். மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் வரை வழி நெடுகிலும் பக்தர்கள் திருக்கண் அமைத்து வழிபடுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.