ராசி வாரியாக நட்சத்திர பலன்கள்
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி – இந்த வாரம் வீட்டில் சுபமங்கள காரியங்கள் ஒத்தி வைக்கப்படலாம். சிலர், நோய் காரணமாக, வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் இருப்பர். வரவேண்டிய புதிய தகவல்கள் தாமதமாக வரும். சிலருக்கு, பணமுடை காரணமாக, நாள் போவது யுகம் போவது போல் இருக்கும். வீட்டு வாடகை வசூல் தாமதமாகலாம். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்க முடியாத நிலை உருவாகலாம். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். அடிக்கடி ஏற்படும் பயணங்கள் தடைப்படும். வீடு மாற்றம் அல்லது தூரமான அல்லது விரும்பிய இடத்திற்கு மாற்றங்கள் இப்போதைக்கு இருக்காது. எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். இந்த வாரம் எல்லாம் கலப்பு பலன்களாக இருக்கும்.
பரணி — இந்த வாரம் தனவரவு திருப்திகரமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. குடும்ப உறவுகளை, சந்திக்க முடியாமல் தனிமைப்பட நேரலாம். அன்றாட வாழ்க்கையில் விரும்பத் தகாதவர்களின் குறுக்கீடுகள் இருக்கும். வீடு மற்றும் வாகனத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியது வரும். அதனால் ஏற்படும் செலவுகள் உங்கள் கையைக் கடிக்கும். சுய முயற்சிகள் கண்டிப்பாக வெற்றிகளைத் தரும். புனித பயணங்கள் போவதற்கான வாய்ப்புகள் தாமதப்படும். சிலருக்குத் தொழிலில் இதுநாள் இருந்து வந்த ஆதாயங்கள் குறையும். எதிர்பாலருடன் சந்தோஷமான சந்திப்புகள் தாமதப்படும். எதிர்பாராத விதமாக கல்வியில் தடைகள் ஏற்படலாம். புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண முயன்றாலும், தோல்வியே அடைவீர்கள்.
கார்த்திகை 1 ஆம் பாதம்.— இந்த வாரம் பூஜா வழிபாடுகள் செய்ய இயலாமல், தடை தாமதங்கள் ஏற்படும். மதிப்பு மிக்க மனிதர்களை சந்திக்க முயன்றாலும், அது நிறைவேறாமல் போகும். வீட்டை விட்டு வெளியே செல்லாதிருப்பது பிரச்சனைகளை குறைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். ஆசைகள் நிறைவேறாத நிலை ஏற்படும்.. பெண்கள் தங்கள் செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்த முற்பட வேண்டும். குறுகிய காலத்திற்கு குடும்பத்தில் சந்தோஷம் குறையும். துன்பம் மற்றும் செலவுகள் மிகுதியான பயணங்கள் தொல்லை தரும். விபத்துகள் மற்றும் காயங்களில் இருந்து தப்பிக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெற்றிக்கு முன் ஏற்படும், தடைகளும் தாமதங்களும் கண்டு மனம் பேதலிக்கும். தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள்.
ரிஷபம்
(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள்)
கார்த்திகை 2,3,4 பாதங்கள் – இந்த வாரம் மனதிற்கினிய தகவல்கள் வந்து சேருவது தாமதப்படும். தனவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகை முற்றிலுமாகக் குறையும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் குறையும். போட்டியாளர்களை காட்டிலும் அரிய சாதனைகள் புரிய முயல்வீர்கள். பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டியதாகும். சிலரின் உடல் நலிவுறும். இதைக்கூட கவனிக்காமல், ஏதோ நினைவில் இருப்பார்கள். செலவுகள் அதிகரிப்பதால் பர்ஸில் உள்ள பணமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். பெண்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். சிலருக்கு வீண் அலைச்சல்கள், வெட்டிச் செலவுகளும் தவிர்க்க முடியாததாகும். பக்தியில் அதிக நாட்டம் ஏற்படும்.
ரோகிணி – இந்த வாரம் மடுப் போன்ற பணவரவை வைத்து, மலை போன்ற செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். உடலில் ஏற்படும் உபாதைகள் ஆஸ்பத்திரி வாசம் ஏற்படலாம். சுறுசுறுப்பு, தைரியம், ஆகியவை குறையும். வெற்றி பெறுவதற்கான தூண்டுதல்கள் இருந்தாலும் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் இருக்காது. தொலைதூரப் பயணங்கள், மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எவ்வளவுதான் முயன்றாலும் சிலருக்கு தொழில் முன்னேற்றங்கள் தடைப்படும். விரும்பிய பொருட்களெல்லாம் வீடு வந்து சேரும் காலம் தள்ளிப் போகும். திருமண காரியங்கள் தடைப்படும். எனவே, ஒத்திப் போடுவது நல்லது. கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும். உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும்.
மிருகசீரிஷம் – 1 , 2 பாதங்கள் – இந்த வாரம் பிடிவாதம், வாக்குவாதம் ஆகிய இரு வாதங்களால், மணவாழ்க்கை எனும் படகு ஆட்டம் காணும். ஆக்கபூர்வமான ஆலோசனை அளித்து அன்பு நண்பர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு உதவ முயன்றாலும் முடியாத நிலையே ஏற்படும். கணவன், மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராகும். குழந்தைகள் படிப்பு வகையில் செலவுகள் அதிகரிக்கும். அதுவே மனக் கஷ்டங்களுக்கு காரணமாகும். எதிர்கால தொழில் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகளைத் தள்ளிப் போடுவது நல்லது. கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்க தாமதமாகும்.
மிதுனம்
(மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசீரிஷம் – 3 , 4 பாதங்கள். – இந்த வாரம் காய் கனிந்து பழமாவது போன்ற இனிய பயணங்களை கனவில் மட்டுமே காண முடியும். உங்கள் திறமையின் காரணமாக பொருளாதார சிக்கல்கள் சீராக்கப்படும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமையும், உயர்வும் ஏற்படுவது தாமதப்படும். முழு மனதுடன் உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களுக்கும், உங்கள் நிறுவனத்துக்கும் சிறப்பான ஆதரவு நல்குவார்கள். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படும். தாமதமான திருமணங்கள் குறைந்த அளவு கூட்டத்தோடு நடந்து முடியும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் தாமதப்படும். வேலை தேடுபவர்களுக்கு, அவர்களின் திறமைக்கேற்ப நல்ல பணி கிடைக்கும் என்றாலும் ஆர்டர் வர தாமதமாகும்.
திருவாதிரை — இந்த வாரம் உங்கள் விருப்பங்கள், அபிலாஷைகள் அனைத்தும் நிறைவேற தாமதம் ஆகும். பொருளாதார நிலை மற்றும் குடும்ப நிலை ஓரளவே சிறப்பாக அமையும். சிலருக்குப் பணி நிமித்தமாக செல்ல வேண்டிய வெளியூர் பயணங்கள் போக்குவரத்துத் தடைகளால், தாமதப்படும். பிராயணங்கள் மூலம் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேற்றம் காண இயலாது. இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரலாம். உறவுகளைப் பிரிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படும். இலாபம் அதிகம் பெற புதிய விற்பனை யுக்திகள் கைவிடுவது நல்லது. தாயின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சி தரும். மருத்துவ மற்றும் சுகாதார அரசுப் பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவியும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள். இந்த வாரம் உங்கள் உடன் பிறப்புகள் மூலமாகத் தொல்லைகள் அதிகரிக்கும். பயணங்கள் தாமதப்படும். அதன் மூலம் நன்மைகள் குறையும். உங்கள் செயல்திறன் கூடும். பலவழிகளிலும் வெற்றி மேல் வெற்றி வரும். பண பிரச்சனைகள் எழும். பிற்கால நலன் கருதி சேமிப்புக்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகள் ஆதரவால் பணியில் முன்னேற்றங்கள் ஏற்படும். வேலைப்பளுவும் கூடும். சிலருக்கு வாகன யோகம் குறையும். கூட்டாளிகளின் நியாயமற்ற நடவடிக்கைகள் உங்கள் மனதில் குழப்பத்தை தரும். முன்பின் தெரியாதவர்களிடம் பேச்சு வைத்துக் கொள்ள வேண்டாம். குழந்தைகளின் தேர்ச்சி தாமதப்படும். விவசாயிகளுக்கு அரசின் உதவிகள் எளிதில் கிடைக்கும்.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம். இந்த வாரம் சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாக கழிக்கும் கனவு, கனவாகவே இருக்கும். பணிபுரியும் பெண்களுக்குத் திருமண காலம் கூடிவந்தாலும், திருமணம் தாமதமாகவே நடக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தாமதப்படும். விற்பனைப் பிரதிநிதிகள் வெளியில் சென்று தங்கள் பணிகளை செய்ய இயலாது. பயணங்களைத் தள்ளிப் போடுவது நல்லது. வண்டிகளில் பயணிக்கும் போது, எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிலர், மக்கள் சேவையில் ஈடுபட்டதன் காரணமாக மக்களால் பாராட்டப்படுவார்கள். குழந்தைகளின் தாமதமான முன்னேற்றம் மனதில் கவலையை தோற்றுவிக்கும். வியாபாரிகள் புதிய வியாபார நுணுக்கங்கள் புகுத்தி ஆதாயம் காண்பது அரிது.
பூசம் — இந்த வாரம் கையில் பண வரவு குறையும். மனதில் சில குழப்பங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் வீட்டிற்குள்ளேயே இருப்பதால், மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. எதையும் சாதிக்கும் திறன், நினைத்ததை நினைத்தபடியே முடிக்கும் முனைப்பும் இருந்தாலும் சூழ்நிலை காரணமாக அனைத்தும் தாமதப்படும். எந்த ஒரு காரியத்தையும் ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செயல்பட்டால் உன்னத நிலையை அடையலாம். சீரற்ற பொருளாதார நிலையில், மனை, வண்டி வாகனம் ஆகியவற்றை வாங்கும் முடிவை ஒத்திப் போடுவது நல்லது. வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவது தாமதப்படும்..
ஆயில்யம் – இந்த வாரம் உங்களுக்கு தெய்வ சிந்தனைகள் மூலம் மனதில் அமைதி நிலவும். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணையால், குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும். செல்வாக்கு மிக்க நபர்கள் உதவியால், சிலருக்குப் பொருளாதார நிலைகள் உயர தாமதப்படும். சிறு தொழில் புரிபவர்களுக்கு தேவையான வங்கிக் கடன் உதவிகள் கிடைக்க தாமதமாகும். ஊரடங்கால், எடுக்கும் முயற்சிகளில் தடை,தாமதங்கள் ஏற்படும். எப்பாடுபட்டாவது வெற்றி அடைய முயல்வீர்கள். சிலருக்கு புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும். விவசாயிகளுக்கு அரசின் மூலம் ஆதாயம் கிட்டும். ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு.
சிம்மம்
(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம் – இந்த வாரம் நேர்மையும் கடின உழைப்பும் மட்டும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். வீட்டில் சுவையான நல்ல உணவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத தனவரவு கிட்டும். எதிர்பார்த்த, கௌரவப் பட்டங்கள், பதவிகள் தாமதமாகும். உயர் அதிகாரிகளின் கெடுபிடியால் அதிக தொல்லைகள் ஏற்படலாம். புதிய நண்பர்களால் தொல்லைகள் எழும். சிலருக்கு இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம், கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை, ஆகியவை ஏற்படும். எனவே துன்பம் வரும் போது துவளாமல், தைரியத்துடன் வாழ்க்கையில் முன்னேற முயலுங்கள். வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தை தாமதமாகவே அடைவீர்கள்.
பூரம் – இந்த வாரம் மனதுக்கு மிகவும் பிடித்தமான பழைய உறவுகளின் வரவு இதயக் கோட்டையில், தென்றல் என வீசும். மணமேடை ஏறும் மங்கல நாளும் தாமதமாகும். சிலர் வீட்டில் தனியாக இருப்பதால் பொழுதைப் போக்குவது கடினமானதாக இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலையில் தொடரும். வருமானம் குறையும். அதன் காரணமாகச் சிக்கல்களும் அதிகரிக்கும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்க தாமதமாகும். எதிரிகளின் பணமும் வந்து சேரும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை.. சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் குறையும்.
உத்திரம்- 1 பாதம் – இந்த வாரம் சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். ஆனால், திருமணம் தள்ளிப் போகும். மனோதைரியம் குறையும் சிலருக்கு மரண பயம் ஏற்படலாம். தொழிலில் எதிர்பார்த்தபடி பணவரவுகள் குறையும். பல வழிகளிலும் செலவுகளும் அதிகரிக்கும். தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும் அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். கூடவே வேலைப்பளுவும் கூடும். வாகன வசதிகள் குறையும். கல்வியில் தடை தாமதங்கள் ஏற்படும். சிலருக்கு, வாக்கு வன்மை ஓங்கும். புதிய வியாபார யுக்திகள் கைவிடுவது நல்லது. சிலருக்கு வீடு, மனை ஆகியவற்றால் நஷ்டங்கள் ஏற்படும். பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.
கன்னி
(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், அஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள். இந்த வாரம் விருந்து, மகிழ்ச்சி கொண்டாட்டம், ஆரவாரம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும் எனக் கனவு கூடக் கண்டு விடாதீர்கள். தாமதமானாலும், சுபச் செய்திகள் எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாமதமாகும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேர தாமதமாகும். நல்ல குரு வாய்க்கப்பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், எடுத்துக் கொண்ட புதிய திட்டங்களில் எதிர்பாராத தாமதங்கள் தடைகள் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி அதற்கேற்பப் போதுமான ஊதியம் இருக்காது.
அஸ்தம் – இந்த வாரம் தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வர தாமதமாகும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளை ஒத்திப் போடுவது நல்லது. சிலருக்குப் பண வருமானம் தாமதமாகும். நல்ல பல கருத்துக்களை கேட்பதின் மூலம் உங்களுக்கு ஞான தன்மை அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய கொள்முதல் மூலம் தொழிலில் அதிகமாக வருவாய் பெருக்கம் தாமதமாகவே. ஏற்படும். வாடிக்கையாளரிடம் நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அதிகாரிகள் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தாமதமாகவே, தடைகளுக்குப் பிறகு, வெற்றி பெறும்.
சித்திரை – 1,2 பாதங்கள் – இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் தாமதப்படும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களை தள்ளிப் போடுவது நல்லது. எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேர காலதாமதமாகும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் தடை, தாமதங்களுக்குப் பிறகு, தேர்ச்சி உண்டு. சிலருக்கு உழைப்புகேற்றார் போல் ஊதியம் கிடைக்காது. மருத்துவப் பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவியும். மக்களுக்கு அரசு ஒத்துழைப்பு கிடைக்கும். சினத்தை அடக்கிய உடன் பிறப்புகளுடன் ஒத்துச் செல்வது நல்லது.
துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள் – இந்த வாரம் நம்பிக்கைகளும், விருப்பங்களும் மனம்போல் நிறைவேறும். நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் ஆலோசனைகள் ஆதாயம் தரும். வழக்கு விவகாரங்கள் தள்ளிப் போகும். அனைத்திலும் வெற்றி எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு, வெற்றி தாமதமாகவே சித்திக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகள் தாமதப்படும். பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைகள் ஏற்படலாம். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வந்தாலும், வேலைப்பளு கூடும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும்.நீங்கள் எதிர்பாராத விதத்தில் பணியில் மாற்றங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள் வேண்டிய காலமிது.
சுவாதி – இந்த வாரம் எடுத்த காரியங்களில் வெற்றி பெற கடின உழைப்பு தேவைப்படும். விரும்பிய பொருட்களை எல்லாம் உடனே, நினைத்தபடி வாங்க முடியாத நிலை ஏற்படும். இரக்க குணத்தால். ஆடைகள், உணவு ஆகியவற்றை பிறருக்கு தானம் செய்வார்கள். எதிர்பாராத பண வரவுகள் தாமதப்படும். ஆனால். இந்த வாரச் செலவுகளைச் சமாளித்துவிடுவீர்கள். இந்த நேரத்தில், புதுப்புது முயற்சிகளில் ஈடுபடாதிருப்பது நல்லது. சிலருக்குப் பதவிகள் உங்களைத் தேடி வந்தாலும், பணியில் பளுவும் கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு கொட்டு மேளம் கொட்டும் நேரம் தாமதப்படும். புதிய சேமிப்புகளை துவங்கலாம். வியாபாரப் பயணங்கள் மூலம் வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூல் செய்ய முடியாத நிலை உருவாகும். புதிய கொள்முதல் மூலம் தொழிலில் அதிகமாக ஆதாயத்தை எதிர்பார்க்க முடியாது.
விசாகம்- 1,2,3 பாதங்கள் – இந்த வாரம் கல்வியில் தடை. தாமதங்கள் ஏற்படும், உயர் கல்வி சேர்க்கையில் தாமதம் ஏற்படும். சூழ்நிலை காரணமாக, தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு, வாகனங்களில் செல்கையில் பிரச்சனை ஏற்படலாம். அவசியமான வேலையின்றி வெளியே செல்லாதீர்கள். அதிகாரிகள் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். சீருடைப் பணியாளர் களுக்கு வேலை பணி கூடும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி தாமதப்படும். உங்கள் உடலில் சுறுசுறுப்பு குறைந்து, சோம்பல் அதிகரிக்கும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. புதிய தொழில் முயற்சிகள் தள்ளி வைப்பது நல்லது. சிலருக்கு அரசு உதவிகள் கிடைக்கும். புத்தக வெளியீடு போன்ற தொழில்களில் முன்னேற்றம் இருக்காது.
விருச்சிகம்
(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம் – இந்த வாரம் பயணங்களில் தடை தாமதங்கள் ஏற்படும். செய்ய வேண்டும் என்று எண்ணிய காரியங்கள், செய்ய முடியாத நிலை ஏற்படும். மருத்துவப் பொருட்கள் வியாபாரம் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். விருந்துகளில் கலந்து கொள்ள நினைத்தாலும் முடியாத நிலை உருவாகும். வீட்டில் இருந்து, உண்டு, உறங்கி பொழுதை கழிப்பீர்கள். ஐ. டி பணியாளர்கள் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். வீட்டில். இருந்தபடியே வேலைகள் செய்வார்கள். பெண்களுக்கு வீட்டு வேலைகள் சேர்ந்து கொள்ளும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்து விடுவார்கள். தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். சிலருக்கு, வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். என்று சொல்வதற்கில்லை. அமைதியாக இருந்து வெற்றி காண முயலுங்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகளிடம் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றி கிடைக்கும்.
அனுஷம் – இந்த வாரம் புதிய தொடர்புகள் நன்மைகள் இருக்காது. செலவுகள் அதிகரிக்கும். பணவரவும் குறையும். ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட, சுபகாரிய நிகழ்ச்சிகள் தாமதப்படும். அனைவரும் வீட்டில் இருப்பதால், மகிழ்ச்சி பொங்கும். அரசாங்கம் தரும் பிரச்சனைகளால் கவலை எழும். புண்ணிய யாத்திரைக்கான பயணங்களைத் தள்ளி வைக்க நேரும். போக்குவரத்துக் குறைபாடுகளால், வெகு தூர பயணங்களில் பாதிப்பு ஏற்படும். இனிய நண்பர்கள் உதவ நினைத்தால், அவர்களை சந்திக்க முடியாத நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளை தள்ளிப் போடுங்கள். அரசு பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும், பணிச்சுமையும் அதிகரிக்கும். ஆயினும், அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்பு தேவை.
கேட்டை – இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு கூடும் என சொல்வதற்கில்லை. அரசு வேலை அல்லது தனியார் கம்பெனியில் உயர் அதிகாரி வேலையில் உள்ளவர்களுக்கு, வேலைப்பளு கூடும். அரசு உதவி கிடைக்க வாய்ப்பு உண்டாகும். எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைப்பது அரிது. சுபச் செய்திகள் எதிர்பார்க்கலாம். ஆனால், அதில் கலந்து கொள்ளும் பாக்கியம் இருக்காது. உங்களுக்கு மிக்க அனுகூலமற்ற வாரம். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்ய நினைத்தாலும், முடியாத நிலையே ஏற்படும். சிலருக்கு அதில் தடை தாமதங்கள் ஏற்படும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவது கடினமாகும். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைத்தாலும் பணிச்சுமை கூடும்.
தனுசு
(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம் – இந்த வாரம் பெண்களால் இலாபம் இருந்தாலும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முடியாத சூழ்நிலை எழும். பொருளாதார நிலை எப்போதும் போல் நிலையாக இராது. ஏற்ற இறக்கமாக இருக்கும். அதன் காரணமாக சேமிப்புகளில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் ஒத்திப் போடுவது நல்லது. சிலருக்கு, வெற்றி எட்டாக் கனியானாலும், தொழிலில் ஓரளவு வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கும். ஆயினும், வேலைப்பளு கூடும். தொழில் விரிவாக்க நிகழ்வுகளைத் தள்ளிப்போடுவது நல்லது. நண்பர்களைச் சந்திக்க முடியாத நிலை ஏற்படும்.
பூராடம் – இந்த வாரம் தனவரவு சீராக இருக்காது. வீட்டு வேலைகள் அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். வீட்டு வேலைகளில் ஆண்களும் உதவுவர். ஆடைகளை வாங்கி இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்வீர்கள். உறவுகள் உங்கள் வீட்டுக்கு, வருகை புரிய முடியாத நிலை உருவாகும். அதேபோல் நீங்கள், வெளியில் செல்ல முடியாமல் தடைகள் ஏற்படும். அன்னதானம் போன்றவற்றில் ஈடுபட நேரும். மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பாராட்டு பெறுவர். சிலருக்கு வீண் பேச்சு, வீண் அலைச்சல் மற்றும் வீண் செலவுகள் ஏற்படும். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். வேலைப்பளுவும் கூடும். சிலருக்கு, சம்பாதிக்கும் திறன் மேம்பட்டு, கையில் காசு தங்காது.
.உத்திராடம் –1 ஆம் பாதம் – இந்த வாரம் சிலருக்கு, புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவானாலும், தடை, தாமதங்களுக்குப் பிறகு காரியம் சித்தியாகும். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும். சீருடைப் பணியாளர்கள், சிலருக்கு சிக்கல்கள் எழலாம். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பு ஏற்படும். சிலருக்குப் பயணங்களில் தடை, தாமதங்கள், அரசு வகையில் அபராதங்களும் செலுத்த நேரலாம். தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்கள் ஒத்துழைப்புக் குறைவால், உற்பத்தி திறன் குறையும் ஏமாற்றத்தை தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் — இந்த வாரம் வீட்டில் இருப்பதால், குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். பிள்ளைகள் தங்கள் இஷ்டத்துக்கு நடப்பர். சொன்ன பேச்சு கேட்க மாட்டார்கள். புதிய தொழில் வாய்ப்புகள், லாட்டரி விஷயங்கள் ஆகியவற்றைத் தள்ளிப் போடுவது நல்லது. ஊரடங்கால், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை தள்ளிப் போகும் நிலை ஏற்படும். பண விஷயத்தைப் பொறுத்தவரை ஓரளவே, திருப்திகரமான வாரமாக இருக்கும். மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்தி போகலாம். கல்வியில் தடைகள் உண்டாகும்.
திருவோணம்- இந்த வாரம் வாகன வசதிகள் சிறப்பாக அமையும். வீணாக வெளியில் அலைவதை தவிர்ப்பது நல்லது. மீறிப் போனால், சீருடைப் பணியாளர்கள் பணியில் சிக்கல்கள் எழும். எனவே, வரும் முன் காப்பதே நல்லது. மனைவிக்கு, வீட்டு வேலைகளில் உதவுவீர்கள். புத்திரர்களுக்கு கல்வியில் தடை தாமதங்கள் ஏற்படும். அவர்கள் தொல்லைகள் தாங்காது. தாய்மார்களுக்கு பொறுமை அவசியம். உடன்பிறப்புகளிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவி கள் கிடைக்காது.. சிலருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். சிலருக்கு, புத்தி மங்கி அதன் காரணமாக செயல்திறன் குறையும். நல்ல பெயர் கிடைக்காது. செலவுகள் அதிகரிக்கும். உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
அவிட்டம் 1,2 பாதங்கள் – இந்த வாரம் ஆடம்பரச் செலவுகளை குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். மாணவர்கள் தங்கள் கல்வியில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற இயலும். அதில், தடைகளும், தாமதங்களும் ஏற்படும். வேலையில் சிரத்தையும், கடின உழைப்பு தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். அப்போதுதான் உங்கள் பொருளாதார நிலையும் சீராகும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. பக்திச் சொற்பொழிவுகளைக் கேட்பதில் ஆர்வமும், மகிழ்ச்சியும் ஏற்படும். நண்பர்கள் பகைவர்களாக மாறும் காலமாதலால் நண்பர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
கும்பம்
(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்— இந்த வாரம் திருமணமாகாத பெண்களுக்கு திருமண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், திருமணம் தள்ளிப் போகும். அவசியமற்ற, அலைச்சல்கள் அல்லல் தரும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை ஏற்று நடக்கும்படியான சூழல் உருவாகும். வேலை அதிகரிக்கும். அதிகாரம் மிக்க உயர் பதவிகளில் உள்ளவர்கள் வீட்டுக்கு கூட போக முடியாத நிலை உருவாகும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியாது. போக்குவரத்து தடைகளால் பயணங்களை ஒத்திப் போட நேரும். வீட்டில் எப்போதும் ஓய்வில் இருப்பதால், மனதில் மகிழ்ச்சி பொங்கும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை. உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும்.
சதயம்- இந்த வாரம் பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும் என்று சொல்வதற்கில்லை. மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் கவலை அளிக்கும். பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தவிர்ப்பது நல்லது. சுக சௌகரியங்கள் ஓரளவு குறையும். சிலருக்கு மன அழுத்தங்கள் கூடும். சுபசெய்திகள் எதிர்பார்க்க முடியாது. போக்குவரத்து இடர்பாடுகளால், வெளிநாட்டுப் பயணங்கள் தள்ளிப் போகும். வாணிபத்தால் தனலாபம் எதிர்பார்க்க முடியாது. வீட்டில் அமைதியும், நிம்மதியும் குறையும். அதன் காரணமாக, மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீண் செலவுகளை குறைத்து சேமித்து வைப்பது நல்லது.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள் – இந்த வாரம் சுபகாரிய நிகழ்வுகள், ஏற்கனவே, குறிப்பிட்ட காலத்தில் நடத்த முடியாது தள்ளிப் போகும். வீட்டிலேயே இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உறவுகள் வருகை குறையும். சந்தோஷம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும். சிலருக்கு, சிறப்பான பொதுசனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்பட்டாலும், முடிவு தாமதப்படும். அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. உங்கள் நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, சந்தைப்படுத்த முடியாமல் தொல்லைகள் எழும்.
மீனம்
(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம் – இந்த வாரம் உங்கள் தொழில் விஷயமாக தீட்டிய முக்கியத் திட்டங்கள் அரசுத் தொல்லைகளால், தள்ளிப்போகும். புதிய நடவடிக்கைகளை ஒத்திப் போடுவது நல்லது. வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் தாமதமாகவே கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். பெண்களின் அறிவுத்திறன் கூடும். அவர்களுக்குக் கணவன்மார்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் தடை, தாமதங்கள் ஏற்பட்டாலும், தேர்ச்சி உண்டு. உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது.
உத்திரட்டாதி- இந்த வாரம் சிலருக்கு, பொன் பொருள் ஆபரணங்கள் ஓரளவு, கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே நடத்த முடியாது. அனைவரும், ஆரோக்கியம் பேண வேண்டிய சூழல் எழும். எல்லோரும் சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்குப் புதுப் புதுப் பதவிகள் கிடைத்தாலும், வேலைப்பளு கூடும். ஆயினும், அதனால் வருவாய் பெருக்கமும் ஏற்படும். அரசாங்கத் துறைகள் மூலம் எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தால் அபராதம் கட்ட நேரலாம். சிலருக்குத் தோல் உபாதைகள் ஏற்படலாம். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுவர்.
ரேவதி- இந்த வாரம் வீட்டில், இருப்பதால், மங்கையரால் மன மகிழ்ச்சி ஏற்படும், அரசாங்கத்தால் உதவிகளும், இலாபமும் பெறுவதில் தாமதம் ஏற்படும். சம்பாதித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த பழைய உறவுகளின் நினைவு வரும். அவர்களைச் சந்திக்க முடியாத நிலை ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது பணிச்சுமை இருக்கும். அவர்களின் பணி பாராட்டு பெறும். மதிப்பும், மரியாதையும் கூடும். வாகன வசதிகள் குறையும். வாகனங்களை வெளியில் எடுக்க முடியாத நிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி ஏற்பட்டாலும், தாமதங்கள், தடைகள் உண்டாகும். இன்பச் சுற்றுலா போன்ற, பயணங்களில் தடை தாமதங்கள் ஏற்படும்.
வார ராசிபலன்கள் 19 – 01 – 2025 முதல் 25 - 01 – 2025 வரைவார ராசி பலன்கள் 02.02.2025 முதல் 08.02.2025 வரை