Skip to content
NallaNaal

    • Enter a date to search

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • 2023 – விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் குன்றத்தில் இன்று திருக்கல்யாண வைபவம்: நாளை தேரோட்டம் நடக்கிறது

திருப்பரங்குன்றம், ஏப்.08- திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் சுப்பிரமணியர்- தெய்வானை திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை தேரோட்டம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கியது. சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க பல்லக்கு, மாலையில் தங்க மயில், தங்க குதிரை, வெள்ளி பூதம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
முக்கிய நிகழ்ச்சியாக பட்டாபிஷேகம் நேற்று மாலை கோவிலில் உள்ள ஆறு கால் மண்டபத்தில் நடந்தது. இதையொட்டி சுப்பிரமணியர், தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர் தெய்வானையுடன் ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு வேத மந்திரங்கள் முழங்க சுப்ரமணிய சுவாமிக்கு செங்கோல், சேவல் கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி சுந்தரேசுவரர் முன்னிலையில் சுப்பிரமணியர், தெய்வானை திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை : நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்வார ராசிபலன் 09.04.2023 முதல் 15.04.2023 வரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

    • Enter a date to search

2023-ம் ஆண்டிற்கான விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2023 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2023 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2023-ம் ஆண்டு சந்திராஷ்டம நாட்கள்
  • 2023 இந்துக்கள் பண்டிகை
  • 2023 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2023 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • இராகு, எமகண்டம், குளிகை முதலியன
  • மனையடி சாஸ்திரம்
  • கெளரி பஞ்சாங்கம் – 2023

முக்கிய செய்தி

  • புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: தமிழகத்தில் பெருமாள் கோவில்களில் நீண்டவரிசையில் பக்தர்கள் தரிசனம்
  • வார ராசிபலன் 24.09.2023 முதல் 30.09.2023 வரை
  • திருப்பதி பிரம்மோற்சவ 6-வது நாள்: அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி
  • திருப்பதியில் இன்று கருட சேவை: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
  • திருப்பதியில் பிரமோற்சவ விழா: சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா
©2023 NallaNaal | Nallanaal.com