Skip to content
NallaNaal

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

திருப்பதியில் இன்று (17-ம் தேதி) ராம நவமி ஆஸ்தானம்: நாளை பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது

திருப்பதி, ஏப்.17 – திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இரவு கோவில் வளாகத்தில் ஜீயர்கள் முன்னிலையில் ஸ்ரீ ராம நவமி ஆஸ்தானம் நடைபெறுகிறது. நாளை பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. காலையில் ரங்கநாயக மண்டபத்தில் சீதா, லட்சுமணர், அனுமன் சமேத ஸ்ரீ ராமருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை 6.30 மணிக்கு அனுமன் வாகனத்தில் கோதண்ட ராமர் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு, கோவில் வளாகத்தில் ஜீயர்கள் முன்னிலையில் ஸ்ரீ ராம நவமி ஆஸ்தானம் நடைபெறுகிறது.
இதையொட்டி இன்று மாலை சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (18-ம் தேதி) இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது.
திருப்பதியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 77 ஆயிரத்து 511 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 26 ஆயிரத்து 553 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியல் காணிக்கையாக ரூ.4.28 கோடி வசூல் ஆனது. பக்தர்கள் சுமார் 10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.

தமிழ்புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு : ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்அயோத்தியில் ராம நவமி விழா: ராமர் நெற்றியில் சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 29.06.2025 முதல் 05.07.2025 வரை
  • வார ராசி பலன்கள் 22.06.2025 முதல் 28.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 15.06.2025 முதல் 21.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com