திருப்பதி, அக். 16- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை ஏழுமலையான் கோவிலில் அங்குரார்ப்பனம் நடந்தது. பிரமோற்சவ விழா நடைபெறும் 9 நாட்களும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒரு வயது குட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கான சிறப்பு தரிசனங்கள், ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் சாதாரண பக்தர்கள் அதிக அளவில் குறைந்த நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.
பிரமோற்சவத்தின் முக்கிய நாளான வருகிற 19-ம் தேதி கருட சேவை நடைபெறுகிறது. கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வருகிற 18-ம் தேதி மாலை முதல் 20-ம் தேதி காலை வரை மலைப் பாதைகளில் பைக்குகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. வருகிற 23-ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.