Skip to content
NallaNaal

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

விடுமுறை தினம்: திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் : கடல் உள்வாங்கியதால் பரபரப்பு

திருச்செந்தூர், ஆக. 19- விடுமுறை தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
நேற்று ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், விடுமுறை தினத்தையொட்டியும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்த வகையில் நேற்று வழக்கமான ஞாயிற்றுக்கிழமை வரும் கூட்டத்தை விட சற்று அதிகமாக பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது. அதனால் தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகியது.
வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதி கடலானது அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய அல்லது பிந்தைய நாட்களில் உள்வாங்குவதும், வெளியேறுவதும் வாடிக்கையாகி விட்டது. இன்று பவுர்ணமி என்பதால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதால் திருச்செந்தூர் கோயில் பகுதியில் அய்யா வைகுண்டர் அவதாரபதி அருகே சுமார் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது. இதனால் பாசிப் படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இருந்தபோதிலும் பக்தர்கள் அச்சமின்றி வழக்கம்போல் புனித நீராடினர். அப்போது பாறைகள் மேல் நின்று சிலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கோவில் புறக்காவல் நிலைய போலீசார் பக்தர்களை பாதுகாப்பாக நீராடுமாறு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்தனர்.

வார ராசி பலன்கள் 18.08.2024 முதல் 24.08.2024 வரைமதுரை மீனாட்சி கோவிலில் ஆவணி மூல திருவிழா : 30-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 29.06.2025 முதல் 05.07.2025 வரை
  • வார ராசி பலன்கள் 22.06.2025 முதல் 28.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 15.06.2025 முதல் 21.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com