Skip to content
NallaNaal

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

மூலவர் பிரதிஷ்டை தினம்: திருச்செந்தூர் கோவிலில் நடந்த தை உத்திர வருடாபிஷேகம்

திருச்செந்தூர், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை உத்திர வருடாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
இக்கோவிலில் மூலவரான சுப்பிரமணியர் பிரதிஷ்டை செய்தது தை உத்திர நட்சத்திரத்தில் ஆகும். எனவே தை மாத உத்திர நட்சத்திரத்தன்று வருடாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு வருடாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோவில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
அதன்பின் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மூலவர், சண்முகர், வெங்கடாசலபதி, வள்ளி, தெய்வானை விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் மூலவர் மற்றும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

அறுபடை முருகன் கோவில்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுப்பயணம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்ஒரே நாளில் 7 வாகன சேவை: திருமலையில் 16-ம் தேதி ரத சப்தமி விழா நடக்கிறது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 29.06.2025 முதல் 05.07.2025 வரை
  • வார ராசி பலன்கள் 22.06.2025 முதல் 28.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 15.06.2025 முதல் 21.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com