Skip to content
NallaNaal

    • Enter a date to search

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி வரை சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த ஆண்டும் இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவை பஸ்கள் (யூ.டி.) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (என்.எஸ்.எஸ்.) சிறப்பு பஸ்களாக இயக்கப்பட உள்ளன.
சென்னை மற்றும் இதர இடங்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பஸ் வசதி செய்து தரப்படும்.
30 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்பு பஸ்களுக்கு ஆன்-லைன் மூலமாக, www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரபூர்வ செயலி (ஆப்) ஆகியவற்றின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பஸ்களின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு 9445014452, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2023 முதல் 30.12.2023 மாலை 5.00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2023 முதல் 29.12.2023 வரை இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருப்பதியில் தம்பதிகள் பங்கேற்கும் சிறப்பு பூஜைக்கான டிக்கெட் வெளியீடுகேதார்நாத் கோவில் நடை அடைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

    • Enter a date to search

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 04.05.2025 முதல் 10.05.2025 வரை
  • ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்: நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தது
  • வார ராசி பலன்கள் 27.04.2025 முதல் 03.05.2025 வரை
  • வார ராசி பலன்கள் 20.04.2025 முதல் 26.04.2025 வரை
  • வார ராசி பலன்கள் 13.04.2025 முதல் 19.04.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com