காரைக்கால், மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் நேற்று பெயர்ச்சியானார்.
இதையொட்டி, திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோவிலில் நேற்று மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சனிப்பெயா்ச்சியின் போது சனீஸ்வர பகவானுக்கு நடக்கும் விசேஷ அபிஷேக, ஆராதனைகளை ஏராளமானோர் தொலைக்காட்சி வாயிலாகவும், யூடியூப் வாயிலாகவும் கண்டு பிரார்த்தனை செய்தனர்.
நளசக்கரவர்த்திக்கு ஏற்பட்ட தோஷம் விலக தர்பை காடாக இருந்த திருநள்ளாறுக்கு வந்து சுயம்புவாக தோன்றிய தர்பாரண்யேஸ்வரரை வணங்கி, தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை வழிபட்டதால், அவருக்கு ஏற்பட்ட துன்பம் விலகி, அவர் இழந்ததையெல்லாம் மீட்டதாக வரலாறு. இக்கோவிலில் சனீஸ்வரபகவான் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி நடைபெறும். அந்த வகையில் சனிப்பெயர்ச்சி நாளான நேற்று கிழக்கு நோக்கி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், திரவியப் பொடிகள், பழம், பஞ்சாமிா்தம், தேன், தயிா், சந்தனம், பன்னீா் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து சகஸ்ரநாம அா்ச்சனை செய்யப்பட்டது. மிகச் சரியாக மாலை 5.20 மணிக்கு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சனி கிரகம் பிரவேசிப்பதை குறிக்கும் வகையில் மங்கள வாத்தியக் குழுவினா் இசையின் போது ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
கோவில் வளாகத்துக்குள், தங்க காக வாகனத்தில் ஸ்ரீசனீஸ்வர பகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாற்றில் நேற்று நடைபெற்ற உலக பிரசித்தி பெற்ற சனிப்பெயர்ச்சி விழாவை உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவரும் வீட்டிலிருந்தே ஸ்ரீ சனீஸ்வர பகவான் அருள் பெற யூடியூப் லிங்க் மூலம் கண்டுகளிக்க காரைக்கால் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது.