நெல்லை, ஜூலை. 16- நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் ஆடி பூர திருவிழாவின் 4-ம் நாளான நேற்று காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பா் – காந்திமதி அம்பாள் கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இங்கு ஆடி பூரத் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வரும் திருவிழா வின் 4-ம் நாளான நேற்று காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து நடை பெற்றது.
இதற்காக செப்பு கேடயத்தில் காந்திமதி அம்பாள் வெண்பட்டு உடுத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கைலாய வாத்தியங்கள் முழங்க மேள தாளங்களுடன் எழுந்தருளினார். பின்னர் அங்கு தன் வளைகாப்பிற்கு ஆசி வேண்ட சந்திரசேகரரும், காந்திமதி அம்பாளும் நோ் ஏதிரே காட்சி கொடுத்து ஆசீா்வாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து பெண்கள் சீா்வசைகளுடன் வர ஊா்வலமாக காந்திமதி அம்பாளை ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருள செய்தனா். மண்டபத்தில் எழுந்தரு ளிய உற்சவா் காந்திமதி அம்பாளுக்கு பல்வேறு சீா்வரிசைகள், விதவிதமான வளையல்கள் அம்பாளின் முன் வைக்கப்பட்டிருந்தன.
அம்பாளுக்கு நீராட்டு நிகழ்ச்சியும், கூந்தல் கண்ணாடியில் பாா்த்து சரி செய்யும் வைபவம் நடைபெற்றது. வளையல் மாலைகள் பக்தா்களின் கரகோஷங்களுடன் அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டது. சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டதும் வந்திருந்த அனைத்து பக்தா்களுக்கும் வளையல், இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இரவில் அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி 4 ரத வீதிகள் வீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.