Skip to content
NallaNaal

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

பங்குனி உத்திர திருவிழா: பழனி முருகன் கோவிலில் நாளை திருத்தேரோட்டம்

பழனி, மார்ச் 24- பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை நடக்கிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோயிலான திருஆவினன்குடி கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கிரி வீதிகளில் தங்க மயில், வெள்ளி மயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 6-ம் நாளான நேற்று மாலை 6 மணியளவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு மேல் சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வானபங்குனி உத்திரத் தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. கிரி வீதிகளில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக வரும் 26-ம் தேதி வரை திருச்சி, மதுரை,தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பழனிக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வார ராசிபலன் 24.03.2024 முதல் 30.03.2024 வரைபங்குனி உத்திரம்: பம்பை நதியில் நாளை நடக்கிறது ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 29.06.2025 முதல் 05.07.2025 வரை
  • வார ராசி பலன்கள் 22.06.2025 முதல் 28.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 15.06.2025 முதல் 21.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com