Skip to content
NallaNaal

    • Enter a date to search

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

ஆனி திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது

சிதம்பரம், ஜூன். 25- சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. நாளை 26-ம் தேதி திங்கள்கிழமை ஆனித் திருமஞ்சன தரிசனம் நடைபெறுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்று வருகிறது. கடந்த 23-ம் தேதி வெள்ளிக்கிழமை தங்க கைலாச வாகன வீதி உலா நடைபெற்றது. நேற்று 24-ம் தேதி சனிக்கிழமை இரவு தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெற்றது.
இன்று 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. சித்சபையில் வீற்றுள்ள நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐவரும் தனி, தனி தேர்களில் வீதிவலம் வருகின்றனர்.
பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. நாளை 26-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்பு பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
வரும் 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் கமிட்டிச் செயலாளர் சிவராம தீட்சிதர், துணை செயலாளர் சிவசங்கர தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் குருமூர்த்தி தீட்சிதர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா தொடங்கியது : 2-ம் தேதி தேரோட்டம் நடக்கிறதுவார ராசிபலன் 25.06.2023 முதல் 01.07.2023 வரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

    • Enter a date to search

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 25.05.2025 முதல் 31.05.2025 வரை
  • வார ராசி பலன்கள் 18.05.2025 முதல் 24.05.2025 வரை
  • வார ராசி பலன்கள் 11.05.2025 முதல் 17.05.2025 வரை
  • வார ராசி பலன்கள் 04.05.2025 முதல் 10.05.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com