Skip to content
NallaNaal

    • Enter a date to search

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

பிரம்மோற்சவத்தின் 5-ம் நாள்: பல்லக்கில் எழுந்தருளி அருள் பாலித்த பத்மாவதி தாயார்

திருப்பதி, கார்த்திகை பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று பல்லகி உற்சவம் நடைபெற்றது. பத்மாவதி தாயார் சர்வ அலங்காரத்துடன் பல்லக்கில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் தாயார் வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
முதல் நாளில் த்வஜாரோஹணம், சின்ன சேஷ வாகன சேவை, இரண்டாம் நாளில் பெரிய சேஷ வாகன சேவை, ஹம்ச வாகன சேவை நடைபெற்றது. மூன்றாம் நாள் காலையில் முத்தையாபு பாண்டிரி வாகனத்தில் கஜேந்திர வரதராக தாயார் எழுந்தருளினார். இரவில் பத்மாவதி தாயார் சிம்ம வாகனத்தில் யோக லட்சுமியாக எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நான்காம் நாள் காலையில் கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் எழுந்தருளி அருள்பாலித்தார். இரவில் ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளினார். ஐந்தாம் நாளான நேற்று காலையில் பல்லகி உற்சவம் நடைபெற்றது. பத்மாவதி தாயார் சர்வ அலங்காரத்துடன் பல்லக்கில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தாயாருக்கு ஆராதனைகள் செய்யப்பட்டன. கலைஞர்கள் நடனமாடியும், பாடல்களை பாடியும் தாயாரை வரவேற்றனர்.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தாயாரை தரிசனம் செய்து பரவசமடைந்தனர். முக்கிய நிகழ்வான கஜ வாகன சேவை நேற்று நடைபெற்றது. வரும் 18-ம் தேதி பஞ்சமி தீர்த்தம் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புஷ்கரணியில் புனித நீராடுவார்கள்.

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியதுமண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு: 17-ம் தேதி மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

    • Enter a date to search

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 25.05.2025 முதல் 31.05.2025 வரை
  • வார ராசி பலன்கள் 18.05.2025 முதல் 24.05.2025 வரை
  • வார ராசி பலன்கள் 11.05.2025 முதல் 17.05.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com
Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்