திருப்பதி, ஏப். 25- திருப்பதி ஏழுமலையானை மே மாதம் தரிசிப்பதற்கான விரைவு தரிசன டிக்கெட் ரூ.300-க்கான நுழைவு கட்டண டிக்கெட் இன்று முதல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக விரைவு தரிசனத்தை ஆன்லைன் முறையில் முன்னதாகவே பதிவு செய்தும் வசதி தேவஸ்தானம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு https://tirupatibalaji.ap.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
மேலும் TTDevasthanams என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியிலும் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் திருமலையில் பக்தர்கள் மே மாதம் தங்குவதற்கான அறைகள் முன்பதிவு நாளை 26ம் தேதி காலை 10 மணிக்கும், திருப்பதியில் உள்ள அறைகள் ஏப்.27ம்தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்பட உள்ளது.
பக்தர்கள் தங்களுக்குத் தேவையான நாளுக்கான டிக்கெட்கள், அறைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் செயலியை மட்டும் பயன்படுத்தி டிக்கெட் மற்றும் அறைகள் முன்பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.