சென்னை, ஆக. 09- இன்று ஆடி கிருத்திகை திருவிழா தமிழகத்தில் முருகப் பெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது.
ஆடி கிருத்திகை ஒரு முக்கியமான திருவிழா ஆகும். இது தமிழ் மாதம் ஆடி மாதமான ஆடி மாதத்தில் வருகிறது. அதன் படி இந்தாண்டு ஆடி கிருத்திகை இன்று (ஆகஸ்ட், 9 ) வருகிறது. இந்த நாள் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் என்பதால் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆடி கிருத்திகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆடி கிருத்திகை நாளில் முருகனை மகிழ்விக்க சிறப்பு பூஜைகளும், ஹோமங்களும் நடைபெறுகின்றன. காவடி யாத்திரை ஆடி கிருத்திகை நாளில் முக்கிய சடங்கு ஆகும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திருத்தணியில் நடைபெறும் இந்த உற்சவத்தில் இந்த நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் காவடி ஏந்தியும், மலையின் 365 படிகள் ஏறியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள். இக்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு மூன்று நாள் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.