Skip to content
NallaNaal

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

பத்மநாபசுவாமி கோவிலில் வரும் 23-ம் தேதி அல்பாசி ஆராட்டு விழா : திருவனந்தபுரத்தில் விமான சேவை நிறுத்தம்

திருவனந்தபுரம், அக். 19- திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலின் அல்பாசி ஆராட்டு விழாவை முன்னிட்டு வரும் 23-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்படுகிறது.
இந்தியாவில் எப்போதும் பரபரப்பாக செயல்படும் விமான நிலையங்களில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையமும் ஒன்று. இந்த விமான நிலையத்தில் வருகிற 23-ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 4 மணி முதல் இரவு 9 வரை விமான சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலின் அல்பாசி ஆராட்டு விழாவை முன்னிட்டு, இந்த விமான சேவை நிறுத்தப்படுகிறது. பாரம்பரிய நிகழ்ச்சியாக அல்பாசி ஆராட்டு விழாவின் போது சாமி சிலை, ஷண்முகம் கடற்கரை கொண்டு செல்லப்பட்டு புனித நீராடல் நடத்தப்படும்.
விமான நிலையத்தின் ஓடுபாதை வழியாகத்தான் சாமி சிலை கொண்டு செல்லப்படும். விமான நிலையம் 1932-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதற்கு முன்னதாக பல நூற்றாண்டுகள் இந்த வழியாகத்தான் சாமி சிலை கொண்டு செல்லப்பட்டது. இதனால் வருடத்தில் இரண்டு நாட்கள் இந்த வழியாக, சாமி சிலையை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால் வருகிற 23-ம் தேதி மாலை 4 மணியில் இருந்து இரவு 9 மணி வரை விமான சேவை நிறத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத பிறப்பையொட்டி காவிரியிலிருந்து எடுத்து வந்த புனித நீரால் : ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு திருமஞ்சனம்சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக பி.என்.மகேஷ் தேர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 29.06.2025 முதல் 05.07.2025 வரை
  • வார ராசி பலன்கள் 22.06.2025 முதல் 28.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 15.06.2025 முதல் 21.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com