Skip to content
NallaNaal

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

வார ராசி பலன்கள் 05.10.2025 முதல் 11.10.2025 வரை

ராசி வாரியாக நட்சத்திர பலன்கள்

மேஷம்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி — இந்த வாரம் அரசு வகை ஆதாயம் ஏற்படும். வங்கிகள் மூலம் கிடைக்கும் உதவிகள் தாமதப்பட்டாலும், புதிதாக தொழில் தொடங்கி ஆதாயம் காண முற்படுவீர்கள். உங்கள் திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி மற்றும் நல்ல முன்னேற்றத்துக்காக கடுமையாக உழைக்க வேண்டிய காலம் இது. சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். குறைந்த அளவிலான உறவுகளோடு, குடும்ப விழாக்கள், சந்தோஷத் தருணங்களாக அமையும். மனைவியுடன் உறவு சீராக, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

பரணி — இந்த வாரம் நினைத்தது நினைத்தபடி நடக்கும். குடும்பத்தில் நடக்க இருக்கும் சுபகாரியங்கள் தாமதப்படும். அதற்காக, அலைந்து திரியும் நிலை ஏற்படும். குடும்பத்தில் இது நாள் வரை இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, மனைவி, குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்கள் மனம் மகிழச் செய்வார்கள். சகோதரர்களின் தீய நடவடிக்கைகள் சஞ்சலத்தை தரும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து, ஒற்றுமை நிலவும். அரசுப் பணியாளர்களுக்கு பணி இடங்களில் வேலை பளு அதிகமானாலும், அதிகாரிகள் அரவணைப்பு இருக்கும். ஒரு சிலருக்கு அதிக உழைப்பின் காரணமாக, அசதியும், உடல் பாதிப்பும் ஏற்படலாம்.

கார்த்திகை 1 ஆம் பாதம்.— இந்த வாரம் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காகவே, மற்றவர்களின் வேலையையும் தானாக முன்வந்து பொறுப்போடு செய்வார்கள். உண்மை உழைப்பு காரணமாக பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். கலைஞர்கள் இலக்கியவாதிகள் ஆகியோருக்குப் புதிய பட்டங்கள், பதக்கங்கள், பாராட்டுக்கள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள் செல்லும் போது வாகனங்களை இயக்கும் போது அதிக கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இயக்கவும். பயணங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் வகையில் எதிர்பார்த்த இலாபங்கள் இல்லை என்றாலும் ஒரளவு சமாளித்து விடுவார்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த தனவரவு இல்லாமல் வங்கியில் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

ரிஷபம்

(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசீரிஷம்-1,2 பாதங்கள்)

கார்த்திகை 2,3,4 பாதங்கள் – இந்த வாரம் நெடுநாட்களாக பெண் தேடி அலைந்தவர்களுக்குத் திருமணம் உறுதியாகி, அதன் காரணமாக மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பார்கள். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வாலிபர்கள் தோழர், தோழிகளுடன் பொதுச்சேவைகளில் ஈடுபடுவர். புதிய வாகனத்தை வாங்கும் முயற்சிகளைத் தள்ளிப் போடுவது நல்லது. நீங்கள் காட்டும் உண்மையான அன்பு கண்டு உறவுகள் மகிழ்ச்சி கொள்வார். அரசு பணிபுரியும் பெண்கள் தங்கள் பணியிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளை, அதிகாரிகள் உதவியுடன் சமாளித்து விடுவர். ஒருவருக்கொருவர் எவ்வளவு அனுசரித்துச் சென்றாலும் வீட்டில் ஏற்படும் சிறு சச்சரவுகளை சமாளிக்க முடியாமல் போகலாம்.

ரோகிணி – இந்த வாரம் நீண்ட நாட்களுக்குப் பிறகு, பலவழிகளிலும் அதிக தனவரவு ஏற்பட்டு பொருளாதார நிலை உயரும். ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் இனிய நட்பால் உங்களுக்கு வளமான எதிர்காலம், வாழ்க்கை முன்னேற்றங்கள் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு. பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றங்கள் ஏற்படலாம். அதன் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரியும் நிலை ஏற்படலாம். பெற்றோர்கள், உற்றார் உறவினர் ஆகியோர், உங்கள் அசாத்தியத் தொழில் திறமைகளைக் கண்டு பொறாமை கொள்வர். உங்கள் தீரம் மிக்க செயல்களால், அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். நீங்கள் கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும்.

மிருகசீரிஷம் – 1 , 2 பாதங்கள் – இந்த வாரம் எறும்பு போன்ற உங்கள் வேகமான, சுறுசுறுப்பு மிக்க பணித் திறமைகளை வெளிக்காட்டி அதிகாரிகள், அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். எதிர்பார்த்த நபர்களிடமிருந்து, எதிர்பார்த்தபடி தனவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடமிருந்து வேலை விஷயமாக தகவல்கள் வந்து சேரும். நண்பர்களுடன் மால்களுக்கு சென்று, மனமகிழ்ச்சி பெருக, உண்டு மகிழ்ந்த காலமெல்லாம் கனவாக தெரியும். வீட்டின் சமையல், உறவுகளின் இல்ல விருந்து உபசாரங்களும் கலந்து கொண்ட, ஒரு திருப்தியை தரும். வீட்டில் நடக்க இருந்த திருமணம்,தடை தாமதங்களுக்குப் பிறகு, மகிழ்ச்சிகரமாக, சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று சுப விரயங்கள் அதிகரிக்கும்.

மிதுனம்

(மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசீரிஷம் – 3 , 4 பாதங்கள். – இந்த வாரம் நீண்ட நாட்களுக்குப் பிறகு, பணவரவு அதிகரிப்பதால், மனதில் மகிழ்ச்சி பொங்கும். சிலருக்குப், பேரின்பம் பெறும் விதமாக மனைவிக்கு குழந்தை பேறு உண்டாகி இருக்கும் சேதி கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பீர்கள். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கை செலவுகளைக் குறைத்து சேமிப்புகளை அதிகரிப்பது நல்லது. நீங்கள் ஆற்றிய பொதுச் சேவை காரணமாக மக்கள் மத்தியில் புகழ் பெறுவீர்கள். புதிய கல்விச்சாலைகளில் இடம்பெற அதிக சிரமங்கள் ஏற்படும். அரசு மூலம் அரசுப் பணியாளர்களுக்கு வரவேண்டிய அனைத்து பண நிலுவைகள் அதிகாரிகள் சிபாரிசின் மூலம் கிடைத்துவிடும்.

திருவாதிரை — இந்த வாரம் இறை தொண்டில் ஈடுபாடு அதிகரித்து, பக்தி மேலீட்டால் பல நற்பணிகள் செய்ய முற்படுவார்கள். நண்பர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். தெய்வத்தின் கருணையால் வாழ்க்கையில் பல புதிய திருப்பங்கள் ஏற்படும். இடைவிடாத உழைப்பின் காரணமாக வேலைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். தாய்வழி உறவுகளின் உதவிகள் கிடைக்கும். அரசு வகையில் வரி பாக்கிகளை உடனே கட்டவேண்டிய கெடுபிடி இருக்கும். அதற்குத் தேவையான பணவரவுகள், பணவுதவி கள் கிடைத்துச் சிக்கல்கள் தீரும். அரசுப் பணியாளர்களுக்கு பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி நடப்பதும், அவர்கள் சொல்லுக்கு மறுபேச்சு பேசாமல் பணிந்து நடப்பது பணியில் முன்னேற்றங்களைத் தரும்.

புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள். இந்த வாரம் உங்கள் வாழ்க்கைப் பாதையில் இருந்து வந்த தடைகள் எனும் முட்கள் விலகி, இன்பமெனும் அழகிய மலர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு பூக்கும். அதன் காரணமாக கவலைகள் மறைந்து, மனதில் ஓர் ஏகாந்தமான அமைதி நிலவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வருமானம் தாராளமாக இருக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கி உல்லாசமாக பொழுது போக்கிய காலங்கள் கனவாகும். தாய், மனைவி, தோழி போன்ற மூலம் லாபம் ஏற்படும். வீண்பழி, தேவையற்ற விமர்சனங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க, உறவுகள் மத்தியில் வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது.

கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம். இந்த வாரம் சிலருக்கு ஆன்மிகப் பெரியவர்கள் அறிவுரைகள் கிடைத்து, வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்களும் கிடைக்கும். சுற்றமும் நட்பும் சூழ சொகுசு வாகனத்தில் உல்லாச சுற்றுலா பயணங்கள் சென்றது கனவு போல் தோன்றும். தற்போது பயணங்கள் செல்வதே சிரமமாக இருக்கும். வீட்டில் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடுகளை தவிர்க்க, அனுசரித்துச் செல்வது நல்லது. வங்கியில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த வேண்டிய நிர்பந்தம் எழும். பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இருப்பதால் சமயம் பார்த்து உங்களுக்கு தேவையான வேலைகளை சாதித்துக் கொள்ளலாம்.

பூசம் — இந்த வாரம் பெரியவர்கள் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவு, புதிய தொடர்புகள் நன்மையும் ஏற்படும். இதுநாள்வரை பிரிந்திருந்த தம்பதிகளுக்குள்ள ஒற்றுமை ஏற்பட்டு, மீண்டும் இணைந்து பேரின்பம் அடைவது உறுதி. மிகவும் அன்பு செலுத்தும் பெண்கள் ஆதரவால் லாபம் ஏற்படும். சிலருக்குக் குழந்தைகள் சுட்டித்தனம், சேட்டைகள் கண்டு எரிச்சல் ஏற்படும். புதிய தொழில் முயற்சிகளை ஒத்திப் போடுவது நல்லது. அரசு உதவிகள் கிடைக்க தாமதப்படும். புத்தக வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு முன்னேற்றம் இருக்கும்.

ஆயில்யம் – இந்த வாரம் சிலருக்குத் தோற்றத்தில் புதிய பொலிவு ஏற்படும். சுற்று வட்டாரத்தில் பெயரும், புகழும் ஓங்கும். படிப்பில் தீவிர முயற்சியின் காரணமாக அறிவுத்திறன் கூடும். சிலர் போலி கம்பெனிகள் நம்பி முதலீடு செய்து, பண விஷயங்களில் ஏமாறலாம். எச்சரிக்கை தேவை. நல்லவர்களுடன் பழகுவது நல்லது. சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். வாக்குவன்மை ஓங்கும். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும். பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். தீட்டிய புதிய திட்டங்கள் நிறைவேறக் காலதாமதம் ஆகலாம்.

சிம்மம்

(மகம்-1,2,3,4 பாதங்கள், பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம் – இந்த வாரம் மனோதைரியம் ஓங்கும். பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும், சிலருக்கு நல்ல குரு வாய்க்கப்பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும். தந்தையின் உறவுகள் மூலம் வேண்டிய உதவிகள் கிடைக்கும். விளையாட்டுத் தனங்களை ஒதுக்கி விவேகத்துடன் நடப்பது நல்லது. சிலருக்குப் பணியில், விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். வாக்குவன்மை ஓங்கும். தாமதமாகிய, புதிய வீடு, மனை ஆகியவைகளின் பத்திரப் பதிவுகள் தற்சமயம் நடக்கும். சிலருக்குப் பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.

பூரம் – இந்த வாரம் நீண்ட நாட்களுக்குப் பிறகு, அன்றாட வருமானத்தில் அபார வளர்ச்சி ஏற்பட்டு பொருளாதார நிலை உயரும். வங்கிக் கணக்குகளில் கையிருப்பு கூடும். சிலருக்கு. விரும்பிய பெண்ணுடன் திருமணப் பேச்சுக்கள் நடக்கும். புத்திர பாக்கியம் ஏற்பட்டு மனமகிழ்ச்சி கிடைக்கும். சிலருக்குப் புதிய சொத்துக்கள், மனை வாங்கும் யோகம் ஏற்படும். அரசு அதிகாரிகளுக்கு துணை புரிய அநேக கீழ்நிலை உதவியாளர்கள் அமைவர். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அதற்கான அனுகூலமான பதில்கள் அரசிடமிருந்து கிடைக்கும். எழுத்தாளர்களுக்கு தங்கள் தொழிலில் ஏற்றம் ஏற்படும். குடும்ப ஆரோக்கியம் மேம்படும். சுற்று வட்டாரத்தில் வீண் சச்சரவுகளை விலைக்கு வாங்காதீர்கள். மனைவியின் ஒத்துழைப்பால் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும்.

உத்திரம்- 1 பாதம் – இந்த வாரம் உடன்பிறப்புகள் மூலம் நன்மைகள் உண்டு. குடும்பத்தில் சுபகாரியம் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களை ஒத்திப் போடுவது நல்லது. சிலருக்கு திடீர் பயணங்களால் தொல்லைகள் ஏற்படும். அதிகாரம் மிக்க தலைமை பதவிகள் தேடிவரும். வீரம் பெருகும். தங்கள் சேவைகள் அங்கீகரிக்கப்பட்டு, புகழும் ஓங்கும். உங்கள் உயர்வைக் கண்டு பிறர் பொறாமை கொள்வர். சிலருக்கு வெப்ப சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம். வியாபாரிகள் புதிய முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. சிலருக்கு, உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். கௌரவப் பட்டங்கள் பதவிகள் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அளவோடு உணவருந்தி அஜீரணத்தை குறையுங்கள்.

கன்னி

(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், அஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள். இந்த வாரம் உங்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஓரளவு பணவரவு ஏற்படும். வெளியூர் பயணங்களை ஒத்திப் போடுங்கள். வீட்டில் தாமதப்பட்ட சுபகாரியங்கள் ஏற்பட்டு, செலவுகள் அதிகரிக்கும். அதிக உழைப்பிற்குப் பிறகு எடுத்த காரியங்கள் ஈடேறும். அதன் மூலம் பணவரவு மற்றும் இலாபங்கள் பெருகும். பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத் தான தருமங்கள் செய்வார்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. சில மாணவர்கள் கடின உழைப்பால், கல்வியில் உயர்நிலை எய்துவர். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சிலர் நடக்கும் போது கீழே விழுந்து காயங்கள் ஏற்பட நேரும். எனவே, எச்சரிக்கை தேவை. படிப்பைப் பொறுத்தவரை, உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.

அஸ்தம் – இந்த வாரம் சிலருக்கு, திருமண வாழ்க்கை திருப்திகரமாகும், மகிழ்ச்சி மிக்கதாகவும் அமையும். அரசு பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் பணிகளில் தடை, தாமதங்கள் ஏற்படும். டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு ஏற்படும் இலாபத்தால், பணவரவு அதிகரிக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மூலம் உற்பத்தி பெருகி, அதன் காரணமாக அவர்களின் வருமானம் அதிகரிக்கும். துவக்கத்தில் தீட்டிய முக்கிய, புதிய திட்டங்கள் நிறைவேறக் காலதாமதம் ஆகலாம். வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வீர்கள். சிலருக்கு தங்கள் பகைவர்களால் பயம் ஏற்படலாம். எனவே, அவர்களிடமிருந்து தூர விலகி இருப்பது நல்லது. வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் கிடைக்கத் தாமதம் ஆகலாம்.

சித்திரை – 1,2 பாதங்கள் – இந்த வாரம் எதிர்பாராத தன வரவுகள் கைக்கு வந்து சேரும். அதற்குத் தக்க செலவுகளும் கூடும். உறவுகளோடு, கேளிக்கை, பிறந்தநாள் விருந்துகள் எனச் செலவுகளோடு, மகிழ்ச்சி பொங்கும் வாரமாக அமையும். அரசு உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புது பதவிகளும் அதனால் சம்பள உயர்வு ஏற்படும். வெளிநாட்டுப் பயணங்களில் ஆதாயங்கள் ஏற்படும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிரபலமானவர்களின் நட்பால் உங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வீர்கள். அரசு மரியாதை கிட்டும். அரசு பணியில் உள்ள பெண்களுக்கு, உயர் பதவிகள் கிடைக்கும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புகள் தாமதப்படும்.

துலாம்

(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள் – இந்த வாரம் குடும்பத்தில் சுகமும் ஆரோக்கியமும் பெருகும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். சிலருக்குத் தங்கள் விருப்பம் போல் உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். தந்தைக்கு நன்மைகள் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புகள் தள்ளிப் போகலாம். உங்கள் குழந்தைகளை பாசத்துடன் அணுகி, அவர்களுக்குத் தேவையானவற்றை மறுக்காமல் வாங்கிக் கொடுங்கள். தொலைதூர செய்திகள் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.

சுவாதி – இந்த வாரம் பெண்களால் லாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல், தனசேர்க்கை ஆகியவற்றால் வரும் இன்பத்துக்கு அளவே இருக்காது.. புதிய திட்டங்களால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் போது வேகத்தை குறைத்து, எச்சரிக்கையுடன் இருந்தால் விபத்தினைத் தவிர்க்கலாம். பெண் குழந்தைகளின் வளர்ப்பில் கூடுதல் கவனம் கொடுங்கள், அவர்கள் போக்கில் விடாமல் அடக்கி வைப்பது நல்லது. உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கம் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும், அதிகாரிகள் அனுசரணையால் வெற்றிகரமாக முடியும். குழந்தைகள் விரும்பிய பொருட்களை எல்லாம் உடனே வாங்கித் தருவீர்கள்.

விசாகம்- 1,2,3 பாதங்கள் – இந்த வாரம் எதிர்பாராத பயணங்களால் ஆதாயம் ஏற்படலாம். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க நேரும். இடைவிடாத பணி காரணமாக நேரத்திற்கு உணவு உண்ண இயலாமல் போகும். புதிய தொழில் தொடங்க, எதிர்பார்த்தபடி அரசு உதவிகள் அனைத்தும் தாமதமின்றி கிடைக்கும். பெரிய மனிதர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆதரவால் நினைத்த காரியங்கள் எளிதில் முடிவடையும். சில நேரங்களில் மனோபயம் நிலவும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகள் மூலம் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். சிலருக்குப் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும்.

விருச்சிகம்

(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள்)

விசாகம்- 4 ஆம் பாதம் – இந்த வாரம் அனைத்து வசதிகளும் அதிகரித்து ஆனந்தம் பெருகும். வீட்டில் ஏற்படும் புதிய வசதிகள் மூலம் மனம் மகிழும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை வாங்குவீர்கள். ஆரவாரம் மிக்க சூழலில், கேளிக்கை விருந்து கள் மற்றும் பெண்களின் அருகாமை ஆனந்தமளிக்கும். நல்ல பண்பாளர்களின் தொடர்புகள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். எப்போதும் மனதில் ஏற்படும் தெய்வ சிந்தனையால் மனநிம்மதி கூடும். சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றிவிடுவார்கள். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். பங்களா போன்ற பெரிய வீடும் அமையும். சிலருக்குக் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்வர்.

அனுஷம் – இந்த வாரம் இனிய பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல் ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடு கிடைக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரும். அரசு பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். உங்கள் எண்ணமெல்லாம் பணத்தை பற்றியதாக இருக்கும். அரசு தொடர்பான விவகாரங்களில் தொல்லை ஏற்படும். தீயோர் தொடர்பு சஞ்சலம் ஏற்படும். அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்வது தவிருங்கள். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு.

கேட்டை – இந்த வாரம் செல்வத்திற்கு அதிபதியான அலைமகளே உங்களைப் பார்த்துச் சிரித்தால் நீங்கள் மகிழ மாட்டீர்களா ? தன வருவாய் திருப்திகரமாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரித்து, ஓரளவு இலாபமும் அதிகரிக்கும். அரசு உயர் அதிகாரிகளின் சிபாரிசால் பல நாட்கள் தள்ளிப் போன, அதிகாரம் மிக்க பதவிக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் சிறந்த பணிக்காக மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். சிலருக்கு தலைவலி / கண்ணில் பிரச்சனைகள் வந்து சீராகிவிடும். கவலை வேண்டாம். பெண்கள் தங்கள் சேமிப்பை வைத்து புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பங்குச் சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடாதிருப்பது இழப்பை தவிர்க்கும்.

தனுசு

(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம் – இந்த வாரம் பக்தி சொற்பொழிவுகள், பாடல்கள் கேட்பதில் ஆர்வம் எழும். எதிர்பாராத தனவரவு, புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவை ஏற்படும். தொழிலில் புதிய விரிவாக்கங்கள் செய்வதால் எதிர்பாராத அளவுக்கு அசாத்திய வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவி மற்றும் அனுகூல தால் உயர் பதவிக்கான சிபாரிசுகள் மேற்கொள்ளப்படும். புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். நிலையான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும். பல புண்ணியத் தல யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். கௌரவம், பட்டம், பதவி ஆகியவை தேடிவரும்.

பூராடம் – இந்த வாரம் குடும்பத்தில் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை இணையதளங்களைப் பார்ப்பதில் வீணடிக்காமல், கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களால் வருமானம் அதிகரித்தால் உள்ளம் மகிழும். விரிவாக்கங்கள் செய்வதால் தொழிலில் அசாத்திய வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் அனுகூல தால் உயர் பதவிக்கான சிபாரிசுகள் மேற்கொள்ளப்படும். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இருக்காது. அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல தேர்ச்சி ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவார்.

உத்திராடம் –1 ஆம் பாதம் – இந்த வாரம் திருமண வயது வந்தும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் பெற்றோர்களால் மேற்கொள்ளப்படும். நல்ல விஷயங்களுக்காக அலைச்சல்கள் ஏற்படும். தேவையற்ற நெடுந்தூரப் பயணங்கள் ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் இடும் கட்டளைகளை ஏற்று நடக்கும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ சங்கல்பத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். பெண்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரித்து, அதன் காரணமாக குடும்பத்தில் அமைதி நிலவும்.

மகரம்

(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள்)

உத்திராடம்- 2,3,4- பாதங்கள் — இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும். கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனு செய்தவர்கள் அனுகூலமான செய்தியை பெறுவர். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஓய்வெடுக்கும் விதமாக நமக்கு எல்லா நாட்களும் ஞாயிறாக இருப்பதில்லை. அதேபோல் இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. இந்த வாரம் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. நேர்மையும் கடின உழைப்பும் மட்டும் நல்ல ஊதியம் அளிக்கும். வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சி அனுபவிப்பீர்கள்.

திருவோணம் – இந்த வாரம் பல திசைகளில் இருந்தும் பணம் வரவு ஏற்படும். தங்கள் வாக்கு வன்மை மற்றும் சிறந்த பொதுசனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். வேளாண் பொருட்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வீணான வாக்குவாதத்தில் ஈடுபடாது இருப்பது நல்லது. அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்.

அவிட்டம் 1,2 பாதங்கள் – இந்த வாரம் தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். தூரப் பயணங்கள் செல்லும் போது எச்சரிக்கை தேவை. அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். புதிய தொழில் தொடர்புகள் வணிக நிலை எதிர்பார்த்தபடி உயரும். உங்கள் நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். தேர்வுகளுக்காக படிக்கும் மாணவர்கள் கவனமாக படித்தால், கல்வியில் தேர்ச்சி உண்டாகும். சேவை செய்யும் முகமாக பொது நலத்தில் ஈடுபட்டுப் புகழ் பெறுவீர்கள். பெண்களின் முன்னேற்றத்தில் குடும்பத்தினர் அக்கறை கொள்வர்.

கும்பம்

(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள்— இந்த வாரம் அனைத்து முக்கிய காரியங்களிலும் எறும்பை ஒத்த சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதுத்தெம்பு, உற்சாகமும் கூடும். புதிய வாகன வசதிகள் மேம்படும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். பக்தி மார்க்கத்தில் தீவிர ஈடுபாடு உண்டாகும். சுபகாரிய நிகழ்ச்சிகள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய வசதி வாய்ப்புகள் உருவாகும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் அதிக லாபம் கிடைக்கும். இந்த வாரம் சிலருக்குக் காரியத் தடைகள், வழக்கு வியாஜ்ஜியங்கள் ஏற்படலாம். அவற்றை சில காலம் ஒத்தி போடுவது நல்லது கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் எச்சரிக்கை தேவை.

சதயம்- இந்த வாரம் பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் குறி காட்டப்படுகிறது. வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் லாபம் தரும். வங்கிக் கணக்கில் ரொக்க இருப்பு கூடும். இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் எளிதில் கைகூடும். குடும்ப உறவுகளின் பரிபூர்ண ஒத்துழைப்புக் கிடைக்கும். தனச்சேர்க்கை உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு பணிச்சுமை குறைவால் மன மகிழ்ச்சி ஏற்படும். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். சொற்பொழிவுத் திறன் அதிகரிக்கும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் வேண்டியவர்களாக ஆகி அவர்களால் பயன் பெறுவர்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள் – இந்த வாரம் பண விஷயத்தைப் பொறுத்தவரை வரவுகள் அதிகமாக திருப்திகரமான வாரமாக இருக்கும். நீண்ட நாளாக வராத கடன் பாக்கிகள் வசூலாகும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலம் உபகாரங்கள் தடைப்படாது. தொழில் தொடர்பாக எடுத்த புதிய முயற்சிகள் யாவும் வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்பட்டு மகிழ் உண்டாகும். புதிய உயர்தரமான வாகன வசதிகள் அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். தெய்வப் பிரார்த்தனையால் பெண்களின் வேண்டுதல்கள் நிறைவேற, வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்..

மீனம்

(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள், ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம் – இந்த வார எதிர்பார்ப்புக்கு மேல் தாராளமான தனவரவு ஏற்படும். தத்துவ உபதேசங்கள், பக்திச் சொற்பொழிவு கேட்பதில் ஆர்வம் ஏற்படும். அதன் காரணமாக மனதில் மிகுந்த உற்சாகம் அமைதியும் பெருகும். நவநாகரீக ஆடைகள், ருசியான உணவு வகைகள் ஆகியவை கிட்டும். தொட்டில் ஆட்டிக் கொஞ்சி மகிழ, புத்திர பாக்கியம் ஏற்படும். சினத்தை அடக்கினால் சிக்கல்கள் தீரும். செலவுகள் அதிகமாக புதிய கடன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை எழும். தீய குணம் உள்ளவர்கள் பயம் ஏற்படும். எனவே, அத்தகைய நபர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. புதிய முதலீடுகளால் தொழில் ஏற்றம் காணும். மிகப் பிரபலமான நபர் சந்திப்பால், நீங்கள் விரும்பிய இடத்திற்கு, இடமாற்றம் பெறுவீர்கள்.

உத்திரட்டாதி- இந்த வாரம் ஆரம்பத்தில் வீட்டு செலவுகள் அதிகரிக்கும். பின்னர், திருமகளின் கருணையால் ஓரளவுக்குப் பொருளாதார முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். நவீன வசதிகளுடன் கூடிய புதிய சொகுசு வாகனம் வாங்க முயற்சி எடுப்பீர்கள். பல வழிகளில் உங்களை நீங்கள் அழகுபடுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் குடும்பத்தையும், பணியையும் ஒரு சேர பார்ப்பதில் இடைஞ்சல்கள் ஏற்படும் அல்லது திணறுவார்கள். ஓய்வின்றி, அடிக்கடி ஏற்படும் வெளியூர்ப் பயணங்கள் மூலம் அசதி ஏற்படும். அரசுவகையில் வரவேண்டிய நிலுவைகள் வந்து சேரும். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளும் நேரம்.

ரேவதி- இந்த மாணவர்கள் தெளிவான அறிவியல் பாடங்கள் சுலபமாக கிரகித்துக் கொள்வர். மனைவியிடம் மட்டுமல்லாமல் நண்பர், மற்றும் உறவுகளிடம் கருத்து முரண்பாடுகளை தவிர்த்தால் நிம்மதி பிறக்கும். பெண்களால் முழுமையாக சந்தோஷம் இருக்கும். வாகனங்களில் எச்சரிக்கையுடன் செல்லவும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரித்து, உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களை கொண்டதாக அமையும். பணவரவு அதிகரிப்பது போல் இருந்தாலும், அதற்கேற்ற செலவுகளும் வாசல் வந்து நிற்கும்.. மனக்கவலைகள் மனைவியின் அரவணைப்பால் குறையும். இனிய கல்விச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்படும். பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு இடமாற்றம் பெற முயற்சிப்பர்.

வார ராசி பலன்கள் 28.09.2025 முதல் 04.10.2025 வரைவார ராசி பலன்கள் 12.10.2025 முதல் 18.10.2025 வரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 12.10.2025 முதல் 18.10.2025 வரை
  • வார ராசி பலன்கள் 05.10.2025 முதல் 11.10.2025 வரை
  • வார ராசி பலன்கள் 28.09.2025 முதல் 04.10.2025 வரை
  • வார ராசி பலன்கள் 21.09.2025 முதல் 27.09.2025 வரை
  • வார ராசி பலன்கள் 14.09.2025 முதல் 20.09.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com