Skip to content
NallaNaal

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

வார ராசி பலன்கள் 29.06.2025 முதல் 05.07.2025 வரை

ராசி வாரியாக நட்சத்திர பலன்கள்

மேஷம்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

  அஸ்வினி -- இந்த வாரம் புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பண வருவாய் அதிகரிக்கும். அரசு வகையில் அதிக அளவு சகாயங்களை பெறுவீர்கள். புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் பணத்தைச் சேமிக்க முற்படுவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்.  தேர்வு முடிவுகள் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பலவகைப் பயணங்களும் அதனால் இலாபமும் ஏற்படும். மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை முகநூல் மற்றும் இணையதளங்களைப் பார்ப்பதில் வீணடிக்காமல், கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

.பரணி — இந்த வாரம் எதிர்பாராத தன வரவு மூலம் ஏற்றம் காண்பீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் மற்றும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும் மாணவர்களுக்கு படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். அரசு பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம். அரசு பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு இடமாற்றம் பெற முயற்சிப்பர்.

கார்த்திகை 1 ஆம் பாதம்.— இந்த வாரம் வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்பச் சுற்றுலா போன்ற, இனிய பயணங்களால் இன்பத்தில் திளைப்பார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். புதிய பதவிகள் தேடிவரும். விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும். உடல் நிலையை அலட்சியப்படுத்தாதீர்கள். எதிர்பாராத வரவு வரும் அளவுக்கு இன்று ஓர் அதிக சக்தி கொண்ட அருமையான வாரம். நேர்மையும் கடின உழைப்பும் மட்டும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும்.

ரிஷபம்

( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

கார்த்திகை 2,3,4 பாதங்கள் – இந்த வாரம் தனவரவு அதிகரித்து, அந்தஸ்தும் உயரும். மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். கேளிக்கை மற்றும் ஆடம்பர செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. நேர்மையும் கடின உழைப்பும் மட்டும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். நண்பர்கள் அனுசரணையாக இருந்த போதிலும், அவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசுங்கள். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வழிமுறைகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். போட்டியாளர்களை காட்டிலும் அரிய சாதனைகள் புரிவார்கள். சிலரின் உடல் நலிவுறும். பெண்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

ரோகிணி – இந்த வாரம் தாயின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சி தரும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் சென்று மகான்கள் தரிசனம் செய்து மகிழ்வார்கள். ஆயினும், அவர்களைச் சமாளிக்க, சரிக்கட்ட சாதுர்யமும், சாமர்த்தியமும் தேவைப்படும். உங்கள் மனதில் எழும் தொழில் தொடர்பான புதுப்புது யோசனைகள் காரணமாகவும், திறமையான நடவடிக்கைகள் மூலமாகவும், உங்களுக்கு, உங்கள் எதிர்பார்ப்பை விட அதிக அளவுக்கு இலாபங்களை அள்ளித் தரும். வியாபாரத்தில் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கப் பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். சிலருக்கு வீண் அலைச்சல்கள், வெட்டிச் செலவுகளும் தவிர்க்க முடியாத தாகும்.

மிருகசீரிஷம் – 1 , 2 பாதங்கள் – இந்த வாரம் அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். சிலரின் கற்பனை வளம் பெருகி, கதை, கவிதை எனத் திறம்பட எழுதிப் புகழ் பெறுவர். போட்டி, பொறாமை காரணமாக நண்பர்களே பகைவராவர். சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாக கழியும். விற்பனைப் பிரதிநிதிகளின் வாக்கு வன்மையால் பொருட்களின் விற்பனை சூடுபிடிக்கும். பிராயணங்கள் மூலம் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேற்றம் காண முயல்வீர்கள். இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரலாம்.. இலாபம் அதிகம் பெற புதிய விற்பனை யுக்திகளை கையாளுவீர்கள். சுறுசுறுப்பற்ற நிலையில் காரியத் தடைகள் ஏற்படும்.

மிதுனம்

(மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசீரிஷம் – 3 , 4 பாதங்கள். – இந்த வாரம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களையும், சுகானுபவங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும். தொலைதூரப் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். வாக்கால் நல்ல வருமானம் உண்டு. உறவுகளைச் சந்திப்பதால் மனமகிழ்ச்சி ஏற்படும். படுக்கை அறை சுகங்கள் மற்றும் நல்ல, ருசியான உணவு ஆகியவையும் கிடைக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். வரும் வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து செயல்பட்டால் வியாபாரம் பெருகும். அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தால் அபராதம் கட்ட நேரலாம். சிலருக்குத் தோல் உபாதைகள் ஏற்படலாம்.

திருவாதிரை — இந்த வாரம் மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர் கள். புத்திர பாக்கியம் ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும். உடன் பிறப்புகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை காண்பீர்கள். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கூட்டமான இடங்களில் பயணிக்கும் போது தங்கள் உடலைப் பற்றிய மேலதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய வாரம். உங்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய உழைப்பு, பிறரால் கவனிக்கப்பட்டு, ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள். இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவம் உண்டாகும். பிள்ளையின் உடல்நிலை உங்களுக்குக் கவலையை தரலாம், எனவே, ஆறுதலாக அவர் மேல், உங்கள் அன்பைப் பொழிந்து, அது விரைவில் குணமடைந்து எழ ஓர் உந்துதல் தரும். நோய் குணமாக அன்பு ஒரு சக்திமிக்க மருந்து அன்றோ? உங்களால் சுலபமாகச் செய்ய முடியாத காரியங்களை, பிறரைச் செய்யச் சொல்லி வற்புறுத்தாதீர்கள். வியாபார விஷயமாக பயணங்கள் நீண்ட நாளைய பொருளாதார நன்மைகளை அளிக்கும். உறவுகளை வெறுக்கும் அளவுக்கு உறவுகளுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகளால் சண்டைகள் எழலாம்.

கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம். இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். மனையின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பண வரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்பட்டுக் கோயில், குளங்களுக்கு தேவையான பணத்தை நன்கொடையாக வழங்கி மகிழ்வீர்கள். பிரபலமானவர்களின் அருகாமையால் ஆறுதலும், நட்பால் முன்னேற்றம் கிடைக்கும். புத்தக வெளியீட்டுத் தொழில்களில் முன்னேற்றம் ஏற்படும்.

பூசம் — இந்த வாரம் மனமகிழ்ச்சி, பகையை வெல்லும் திறன் ஆகியவை ஏற்படும். எதிர்பாராத தனவரவு உண்டு. விருந்து, மகிழ்ச்சி கொண்டாட்டம், ஆரவாரம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சுபச் செய்திகள் எதிர்பார்க்கலாம். வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். வியாபார நிமித்தமாக தொலைதூரப் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். இடைவிடாத வேலை காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். மது, மாமிசம் அருந்துபவர்களுக்கு அஜீரண தொல்லைகள் எழலாம்.

ஆயில்யம் – இந்த வாரம் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவி கள் கிடைக்கும். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலம் வருமான வாய்ப்புகள் பெருகும். கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். தந்தைவழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளை புகுத்தி, இலாபம் எனும் வெற்றிக் கனியைப் பறிப்பார்கள்.

சிம்மம்

( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம் – இந்த வாரம் உங்களுக்கு தெய்வ சிந்தனைகள் மூலம் மனதில் அமைதி நிலவும். ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும். குடும்பத்திற்காக உங்கள் சந்தோஷங்களை தியாகம் செய்வீர்கள். அன்புக்கு இனியவர்களால் உங்கள் கண்ணீர் துளிகள் துடைக்கப்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும். உயர் அதிகாரிகள் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். தேவையற்ற, எதிர்பாராத செலவுகள் ஏற்பட பணமுடை ஏற்படும். உங்கள் கடினமான உழைப்பு இன்று, அதற்குரிய சன்மானத்தை அளிக்கும். நீங்கள் உங்கள் காதுகளால் கேட்க விரும்பிய, மக்களின் பாராட்டு உங்களை நீராட்டும்.

பூரம் – இந்த வாரம் வாக்கு வன்மை ஓங்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த படி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். சந்ததி விருத்தி ஏற்படும். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும் அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். புதிய வியாபார யுக்திகள் அதிக இலாபம் அடைவீர்கள். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும். பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.

உத்திரம்- 1 பாதம் – இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். தொலைதூர செய்திகள் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் வருவாய் பெருக்கமும் ஏற்படும். உங்கள் தொழில் விஷயமாக தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த புதிய நடவடிக்கைகள் வெற்றி பெறும். பெண்களின் அறிவுத் திறன் கூடும். நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கும். எதிரிகளின் பணமும் வந்து சேரும்.

கன்னி

( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், அஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள். இந்த வாரம் சுபகாரிய செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகள் பண வருமானம் அதிகரிக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நல்ல பல கருத்துக்களை கேட்பதின் மூலம்உங்களுக்கு ஞான தன்மை அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய கொள்முதல் மூலம் தொழிலில் அதிகமாக வருவாய் பெருக்கம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும் வாடிக்கையாளரிடம் நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அதிகாரிகள் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்

அஸ்தம் – இந்த வாரம் புது புது முயற்சியில் ஈடுபட்டு நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகள் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரப் பயணங்கள் மூலம் வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூல் செய்து விடுவார்கள். உறவு மற்றும் நண்பர்கள் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும்.. புதிய கொள்முதல் மூலம் தொழிலில் அதிகமாக ஆதாயம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த சுபகாரிய செய்திகள் வருவதோடு செலவுகளும் அதிகரிக்கும். மேடைப் பேச்சாளர்கள் புகழ் பெறுவர். வாக்குவாதத்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் எழலாம். அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது.

சித்திரை – 1,2 பாதங்கள் – இந்த வாரம் சுப காரியங்களுக்கு வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயம், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீரம் பொங்கும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். இசை ஆர்வத்தால் சங்கீத சபா களுக்கு சென்று இசை கேட்டு மகிழ்வார்கள். நீங்கள் எதிர்பாராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.

துலாம்

( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள் – இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பண வரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், அன்பும் கிடைக்கும். புத்தக வெளியீடு போன்ற தொழில்களில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஆதாயம் அதிகரிக்கும்.

சுவாதி – இந்த வாரம் உங்களுக்கு ஓரளவு பணவரவு இருக்கும். பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலருக்கு பணமுடை ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்கள் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம்.

விசாகம்- 1,2,3 பாதங்கள் – இந்த வாரம் விருந்துகளில் கலந்து கொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதை கழிப்பீர்கள். பக்திச் சொற்பொழிவுகளைக் கேட்பதில் ஆர்வமும், மகிழ்ச்சியும் ஏற்படும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம் அரசியல்வாதிகளிடம் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றி கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றி திக்கை நோக்கிச் செல்லும். கவர்ச்சிகரமான பொருட்களை பரிசாக அறிவித்து வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். நண்பர்கள் விரும்பி வந்து உதவி செய்வார்கள்.

விருச்சிகம்

( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்- 4 ஆம் பாதம் – இந்த வாரம் சுபகாரிய நிகழ்ச்சிகள், புத்திர பாக்கியம் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகள் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். திடீர்ப் பயணங்கள் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்து விடுவார்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். சில நேரங்களில் சுறுசுறுப்பான நிலையும், மனோபயம் நிலவும். விரிவாக்கங்கள் செய்வதால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.

அனுஷம் – இந்த வாரம் சுபச் செய்திகள் எதிர்பார்க்கலாம். உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். மேலும், எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். மாணவர்கள் கிரகிப்பு தன்மையால் தங்கள் கல்வியின் தரத்தை உயர்த்தி கொள்வர். பழைய கடன்கள் விரைவில் வசூலாகும். தங்கள் சகோதரனின் நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சலூட்டும்.

கேட்டை – இந்த வாரம் ஏமாற்றத்தை தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது சிறப்பு. போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கும்.

தனுசு

( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம் – இந்த வாரம் உடன்பிறப்புகளிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவி கள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பு ஏற்படும். சிலருக்குப் பயணங்களிலும், அரசு வகையில் தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்கள் ஒத்துழைப்புக் குறைவால், உற்பத்தி திறன் குறையும் வாய்ப்பு ஏற்படலாம். சிறப்பான உடை அணிந்து மிடுக்காக உலா வருவீர்கள்.

பூராடம் – இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகள் வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். சிலருக்கு வீண் பேச்சு, வீண் அலைச்சல் மற்றும் வீண் செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனு செய்தவர்கள் அனுகூலமான பதில் பெறுவர். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும்.

உத்திராடம் –1 ஆம் பாதம் – இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். புதிய தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.

மகரம்

( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

உத்திராடம்- 2,3,4- பாதங்கள் — இந்த வாரம் செயல்திறன் அதிகரிக்கும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். சிலருக்கு, நண்பர்களும் பகைவர்களாக மாறும் காலமாதலால் நண்பர்களிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு உழைத்தால்தான் அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்கும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக

திருவோணம்- இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு ஏற்படும். குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். உறவுகளை அனுசரித்து சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். வேலையில் சிரத்தையும், கடின உழைப்பு தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். அப்போதுதான் உங்கள் கஜானாவும் பணத்தால் நிரம்பும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். அதன் காரணமாக உற்பத்தி பெருகி, இலாபமும் அதிகரிக்கும். நன்கு ஆராய்ந்து பங்குச் சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.

அவிட்டம் 1,2 பாதங்கள் – இந்த வாரம் அன்னையின் அன்பும் அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். சுகமான சுற்றுலாப் பயணங்களின் மூலம் மனதில் மகிழ்ச்சி பொங்கும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை. உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும்.

கும்பம்

( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள்— இந்த வாரம் சுக சௌகரியங்கள் அதிகரிக்கும்.. சுபசெய்திகளால் மனம் மகிழும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகள் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தன லாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீண் செலவுகளை குறைத்து சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகள் ஆதரவால் முன்னேற்றம் காண்பர்

சதயம்- இந்த வாரம் பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும். சிறப்பான பொதுஜன தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. உங்கள் நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள் – இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு, அதன் காரணமாக குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம் – இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல் ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடு கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்வர். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலம் பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும்.

உத்திரட்டாதி- இந்த வாரம் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள். கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும். சம்பாதித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த பழைய உறவுகளின் வரவு மகிழ்வைத் தரும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையை காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும்.

ரேவதி- இந்த வாரம் வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான பணச் செலவுகள் ஏற்படும் இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். அரசுப் பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற மிகுந்த அக்கறையுடன் படித்தல் அவசியம். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

வார ராசி பலன்கள் 22.06.2025 முதல் 28.06.2025 வரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 29.06.2025 முதல் 05.07.2025 வரை
  • வார ராசி பலன்கள் 22.06.2025 முதல் 28.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 15.06.2025 முதல் 21.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com