Skip to content
NallaNaal

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

தொடரும் மோசமான வானிலை: கேதார்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு மே 8 வரை நிறுத்தம்

கேதார்நாத், மே 06- மோசமான வானிலை காரணமாக உத்தரகண்டின் கேதார்நாத் புனித பயணத்திற்கான முன்பதிவு மே 8-ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.
உத்தரகண்டின் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரை மக்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், கேதார்நாத்தில் அடுத்த 3 அல்லது 4 நாள்கள் மோசமான வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக யாத்திரைக்கான முன்பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறையின் தகவலின்படி, மே 10ஆம் தேதி வரை யாத்திரைக்கு ஏற்கனவே 1.26 லட்சம் பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கேதார்நாத்தில் தற்போது மோசமான வானிலை நிலவி வருவதால் முன்பதிவு செய்வது மே 8-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மே 4-ம் தேதி வரை 1.23 லட்சம் பக்தர்கள் கேதார்நாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கேதார்நாத் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குப் பாதுகாப்புப் படையினர் உதவி செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடிய விடிய நடந்த எதிர்சேவை நிகழ்ச்சி: மதுரை வைகை ஆற்றில் இன்று எழுந்தருள்கிறார் கள்ளழகர்தங்கக் குதிரை வாகனத்தில், பச்சை பட்டு உடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 06.07.2025 முதல் 12.07.2025 வரை
  • வார ராசி பலன்கள் 29.06.2025 முதல் 05.07.2025 வரை
  • வார ராசி பலன்கள் 22.06.2025 முதல் 28.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 15.06.2025 முதல் 21.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com