Skip to content
NallaNaal

    • Enter a date to search

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • 2023 – விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

திருப்பதி கோவிலில் பாடல் பாடி சேவை செய்ய பாடகர்கள் தேர்வு : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

திருப்பதி, அக். 22- திருப்பதி கோவிலில் பக்தி பாடல்கள் பாடி சேவை செய்ய பாடகர்கள் நவம்பர் 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜ சாமி கோவில்களில் நடைபெறும் ஊஞ்சல் சேவையில் தாசா சாகித்ய திட்டம் சார்பில், பக்திப் பாடல்கள் பாடப்பட்டு வருகிறது. இந்த ஊஞ்சல் சேவையில் கலந்து கொண்டு பக்திப் பாடல்களைப் பாட ஆர்வமுள்ள பாடகர்கள் மற்றும் பாடகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்காக தேவஸ்தானத்தின் தாசா சாகித்ய திட்டம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள பாடகர்கள் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வலை தளமான http://apps.tirumala.org/dsp/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நேரடியாக அல்லது பிற ஊடகங்கள் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. கலைஞர்கள் தங்கள் விண்ணப்பங்களை நேற்று முதல் நவம்பர் 14-ம் தேதி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த பாடகர்களுக்கு நவம்பர் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை திருப்பதியில் உள்ள மகதி ஆடிட்டோரியத்தில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்வு நடத்தப்படும். விண்ணப்பித்த பாடகர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் இந்தச் செயல்முறை தொடர்பாக தேவஸ்தானம் எந்த முகவர்களையும், பிரதிநிதிகளையும் நியமிக்கவில்லை. எனவே மோசடி செய்பவர்களால் பாடகர்கள் ஏமாற வேண்டாம். கூடுதல் விவரங்களுக்கு தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 7-ம் நாள்: சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி2 பிரம்மோற்சவ விழாக்களில் திருப்பதியில் உண்டியல் வசூல் ரூ.47.56 கோடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

    • Enter a date to search

2023-ம் ஆண்டிற்கான விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2023 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2023 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2023-ம் ஆண்டு சந்திராஷ்டம நாட்கள்
  • 2023 இந்துக்கள் பண்டிகை
  • 2023 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2023 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • இராகு, எமகண்டம், குளிகை முதலியன
  • மனையடி சாஸ்திரம்
  • கெளரி பஞ்சாங்கம் – 2023

முக்கிய செய்தி

  • சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தரிசனம்
  • வார ராசிபலன் 03.12.2023 முதல் 09.12.2023 வரை
  • திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு விழாக்கள்: தேவஸ்தானம் அறிவிப்பு
  • லட்சக்கணக்கான பக்தர்களின் கோஷத்துடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
  • வார ராசிபலன் 26.11.2023 முதல் 02.12.2023 வரை
©2023 NallaNaal | Nallanaal.com