திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.இந்நிலையில், 10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது.இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. பிறகு, பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.மூலவர் சன்னதி வழியாக உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் \”அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா \”என்று விண்ணதிர கோஷம் எழுப்பி வணங்கினர்.தொடர்ந்து பிற்பகல் 3.30 மணியளவில் மகாதீபம் ஏற்றப்படுவதற்கு முன்பாக நிகழ்வுகள் நிடைபெற்றது. கொப்பரையில் காடா துணி நிரப்பப்பட்டது. சுமார் 175 கிலோ எடை கொண்ட கொப்பரையின் உயரமானது 6.5 அடி ஆகும். மகா தீபத்திற்கு நாள் ஒன்றுக் சுமார் 650 கிலோ நெய் பயன்படுத்தப்பட உள்ளது. தீபத்தை ஏற்ற நாள்தோறும் 2 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. நிகழ்வின் ஒரு பகுதியாக, பராசக்தியம்மன் மற்றும் சண்டிகேஷ்வரர் ஆகியோரும் கொடி மரத்தின் முன்பாக எழுந்தருளினர். அண்ணாமலையார் கோயில் கொடிமரம் முன்பு உள்ள அலங்கார மண்டபத்திற்கு விநாயகர் வருகை தந்தார்.முருகன், உண்ணாமலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் ஆகியோரும் வருகை தந்தனர். இந்நிலையில், 2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் மகா தீபம் ஏற்றப்பட்டது.பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கோயில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டது.மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோமீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தைப் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வார ராசிபலன் 26.11.2023 முதல் 02.12.2023 வரைதிருப்பதி கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு விழாக்கள்: தேவஸ்தானம் அறிவிப்பு