Skip to content
NallaNaal

    • Enter a date to search

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு

சபரிமலை, சபரிமலையில் இன்று மண்டல பூஜையை முன்னிட்டு கோயில் நடை திறக்கப்பட்டு பிறகு இரவில் மூடப்படுகிறது.
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மண்டல மற்றும் மகர பூஜைகள் நடைபெறும் இந்தப் பருவத்தில், சபரிமலை கோயிலின் வருவாயை திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்தப் பருவம் தொடங்கிய 39 நாள்களில் (டிச.25 வரை) ரூ.200 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தேவஸ்தானத்தின் தலைவர் பி.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். காணிக்கையாக அளிக்கப்பட்ட சில்லரைகள் எண்ணப்படும்போது இந்த மதிப்பு இன்னும் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மொத்த வருவாயான ரூ. 204.30 கோடியில் ரூ.63.89 கோடி பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்டது. அரவணை பாயாசம் விற்பனையின் மூலம் ரூ.96.32 கோடியும் அப்பம் விற்பனையின் மூலம் ரூ.12.38 கோடியும் ஈட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த முறை 31 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஐயப்பனைத் தரிசிக்க வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். நெருக்கடியான மக்கள் திரள் இருந்தபோதும் தேவஸ்தானம் அதன் வரையறைக்குட்பட்டு அவர்களுக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்தியதாக பிரசாத் தெரிவித்துள்ளார். இன்று மண்டல பூஜைக்குப் பின்னர் கோயில், புதன்கிழமை இரவு 11 மணியோடு மூடப்படவுள்ளது. அதன் பிறகு டிச.30 மகரவிளக்கு பூஜைக்காகத் திறக்கப்படும். ஜன. 15 சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் உள்பட தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்புசிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

    • Enter a date to search

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 18.05.2025 முதல் 24.05.2025 வரை
  • வார ராசி பலன்கள் 11.05.2025 முதல் 17.05.2025 வரை
  • வார ராசி பலன்கள் 04.05.2025 முதல் 10.05.2025 வரை
  • ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்: நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தது
  • வார ராசி பலன்கள் 27.04.2025 முதல் 03.05.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com