நெல்லை.ஜூலை.03. திருநெல்வேலி மாவட்டம் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவில் ஆனித் தேரோட்டத்தினை முன்னிட்டு, சபாநாயகர் அப்பாவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , மாவட்ட கலெக்டர் மரு..கா.ப.கார்த்திகேயன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் , பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் , நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி , துணை மேயர் கே.ஆர்.ராஜீ, மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் , மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் தேரினை வடம் பிடித்தனர்.
தென் தமிழ்நாட்டில் வற்றாது வளங்கொழிக்கும் தாமிரபரணி என வழங்கும் தண்பொருநை ஆற்றின் பாங்காய் அமைந்துள்ளது. திருநெல்வேலி என்னும் புண்ணியதலம் இது. பாண்டி நாட்டில் பதினான்கு பாடல்பெற்ற சிவத்திருத்தலங்களில் ஒன்றாகும்.
வேதசர்மா இறைவனுக்குத் திருவமுது ஆக்குவதற்கு காயப்பேட்டிருந்த நெல் மழையினால் நனையாதபடி வேலியிட்டுக் காத்த சிறப்புடையதும். அகத்திய முன்pவருக்கு திருமணக் கோலம் காட்டிய மேன்மையுடையதும், தாருகாவனத்து முனிவர்கள் செருக்கினை அடக்கிய புகழை உடையதும் பால்குடம் சுமர்ந்து சென்ற இராமக்கோன் என்ற அன்பரை இறைவன் மூங்கில் வடிவாக இருந்து இடறிவிட்டு பாலை தன்மேல் கவிழச் செய்து அதனால் வெட்டுண்டு காட்சியருளிய பெருமையுடையதும், திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பெருமையுடையதும் ஆகிய பற்பல சிறப்புக்கள்; நிறைந்த இப்புண்ணியதலத்தில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாகிய சிவபெருமான் உயிர்களின் மூவகை கட்டுகளாகிய அரவணங்களைத் தகர்த்தெரிந்த செயலை விளக்குவதாகிய திரிபுரம் எரித்த வரலாற்றின்;படி அப்போது தேர் ஏறி வந்த திருக்கோலத்தை நினைவூட்டிக் காட்டுவதாகிய தேர்த் திருவிழா அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவில் ஆனி பெரும்தேரோட்டத் திருவிழா 24.06.2023 அன்று கொடியேற்றதுடன் தொடங்கி 02.07.2023 தேர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாதித்தனர். தேர்திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ப.மு.செந்தில்குமார் , மாநகர காவல் துணை ஆணையர்கள் சரவணகுமார் கவிதா , இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதாபிரியதர்ஷினி, திருநெல்வேலி வட்டாட்சியர் வைகுண்டம் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.