விருதுநகர், ஜூலை 01- சதுரகிரி மலை கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதம் தோறும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், சதுரகிரி மலை கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனி மாத பிரதோஷம், பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சதுரகிரி மலைக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர்.